Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 8 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுகிறார்கள்: ஒப்புக் கொண்ட பா. ரஞ்சித்

சென்னை: சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுற விஷயம் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்று இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள படம் பற. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் இயக்குரும், தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய ரஞ்சித் கூறியதாவது,
ஒரேயொரு ட்வீட் போட்டு இந்த கார்த்திக் சுப்புராஜ் பட்ட பாடு இருக்கே...

சமுத்திரக்கனி
கண்ணகி, முருகேசனின் படுகொலை பற்றி படம் பேசியிருக்கிறது. அந்த படுகொலை பற்றி கேட்கும்போதே அழுகை வரும். அந்த அளவுக்கு மோசமான ஆணவக் கொலை. திமிர் கொலை என்றே கூறலாம். சமுத்திரக்கனிக்கு அம்பேத்கரின் பெயரை வைத்திருக்கிறார் கீரா. இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்த படம் வெற்றியடைய வேண்டிய தேவையும் உள்ளது. 2 தயாரிப்பாளர்கள் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தது முக்கியமானது.

சாதி
சினிமாவில் மாடல் உருவாக்குவது மிகவும் கஷ்டம். அனைத்து கமர்ஷியல் படங்களிலும் சாதி முரணை பற்றி, சாதிய பிரச்சனை பற்றிய விவாதத்தை வைக்க வேண்டிய சூழல்நிலை உருவாகியிருப்பதை வரவேற்கிறேன். இதை முக்கியமானதாக பார்க்கிறேன்.

பாலியல் சுரண்டல்
பெண்களுடைய குற்றச்சாட்டுகளை பற்றி மட்டுமே பார்க்கக் கூடாது. சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுற விஷயம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இல்லை என்று சொல்ல முடியாது. இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஸ்ரீரெட்டியோ, மற்றவர்களோ அந்த பிரச்சனையை ஆராய்வதன் மூலமாக அது உண்மையா, இல்லையா என்கிற அடுத்தக்கட்டத்திற்கு போகும் என்று நான் நினைக்கிறேன். ஒரு பெண் புகார் தெரிவிப்பதால் அவரை குற்றவாளியாக மாற்றுவது ரொம்ப ரொம்ப தப்பு. நான் அதை எதிர்க்கிறேன் என்றார் ரஞ்சித்.

சின்மயி
தமிழ் திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று சில நடிகைகள் புகார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீரெட்டி, பாடகி சின்மயி உள்ளிட்டோர் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக தெரிவித்தனர். இந்நிலையில் ரஞ்சித் அவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.