»   »  பெண்கள் படுக்கைக்கு தான் சரி என நான் சொன்னதில் என்ன தப்பு?: சீனியர் நடிகர் கேள்வி

பெண்கள் படுக்கைக்கு தான் சரி என நான் சொன்னதில் என்ன தப்பு?: சீனியர் நடிகர் கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பெண்கள் பற்றி நான் சொன்னதில் என்ன தவறு உள்ளது என்று தெலுங்கு நடிகர் சலபதி ராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா தனது மகன் நாக சைதன்யா, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோரை வைத்து தயாரித்துள்ள ராரண்டோய் வேதுகா சுதம் பட நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனியர் நடிகரான சலபதி ராவ் பெண்கள் படுக்கைக்கு தான் சரியானவர்கள் என்றார்.

நாகர்ஜுனா

நாகர்ஜுனா

சலபதி ராவ் கூறியதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நாகர்ஜுனா, நாக சைதன்யா, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் தனித்தனியாக விளக்கம் அளித்துள்ளனர்.

மன்னிப்பு

மன்னிப்பு

தன் பேச்சை கேட்டு ஆளாளுக்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து சலபதி ராவ் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் மன்னிப்பு கேட்ட விதம் அனைவரையும் மேலும் கோபம் அடைய வைத்துள்ளது.

என்ன தவறு?

என்ன தவறு?

நான் யார் மனதையும் காயப்படுத்த நினைக்கவில்லை. நான் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். பெண்கள் ஆபத்தானவர்களா என்று கேட்டதால் கோபப்பட்டேன் என்று சலபதி ராவ் தெரிவித்துள்ளார்.

பெண்கள்

பெண்கள்

பாம்புகளுடன் படுப்போமா? இல்லை. அதனால் தான் பெண்கள் ஆபத்தானவர்கள் இல்லை, எனவே அவர்களுடன் படுக்கிறோம் என்றேன். இதில் என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை என்கிறார் ராவ்.

மீடியா

மீடியா

சில சேனல்கள் தெலுங்கு தெரியாமல் நான் சொன்னதை புற்றுநோய் போன்று பரப்பிவிட்டார்கள். நான் பெண்ணை ஒருபோதும் அவமதிக்க மாட்டேன். நான் பெண்களை தாயாக, சகோதரியாக மதிப்பவன் என்று ராவ் கூறியுள்ளார்.

English summary
Senior telugu actor Chalapathi Rao apologised for his derogatory remark on women but asked what is wrong in his remark.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil