நள்ளிரவில் வீட்டுக் கதவை தட்டித் தொல்லை.. சீரியல் நடிகர் அர்னவ் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது

சென்னை: சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா விவகாரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஏற்கனவே முதல் கணவரை பிரிந்த நிலையில், நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அர்னவ், தற்போது திவ்யாவுடன் சண்டை போட்டு வருவது பரபரப்பை கிளப்பி உள்ளது.

சின்னத்திரை சீரியல்களில் வருவதை விட சீரியல் நடிகர்களின் உறவு பிரச்சனை பெரிதாகி கொண்டே போவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது.

கணவர் குற்றச்சாட்டு

கணவர் குற்றச்சாட்டு

முதல் கணவரை விவாகரத்து செய்யாமலே டிவி நடிகை திவ்யா தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும், அவருக்கு ஒரு குழந்தை இருப்பதையும் மறைத்து விட்டார் என பிரச்சனை வெடித்த நிலையில், பரபரப்பாக யூடியூப் சேனல்களில் பேசி வந்தார் அர்னவ்.

நடிகையுடன் தொடர்பு

நடிகையுடன் தொடர்பு

சீரியல் நடிகை ஒருவருடன் அர்னவுக்கு இருந்த தொடர்பு பற்றி கேட்டதால் தான் இப்படியொரு பிரச்சனையை கிளப்பி உள்ளார் என திவ்யா கூறியுள்ளார். தனது வயிற்றில் குழந்தை இருந்த நிலையில், அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்தினார் என அவர் கொடுத்த புகார் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நள்ளிரவில் தொல்லை

நள்ளிரவில் தொல்லை

காதலித்து திருமணம் செய்து கைவிட்டதாக சீரியல் நடிகை திவ்யா புகார் தெரிவித்து வரும் நிலையில் நள்ளிரவில் வீட்டுக்கதவை தட்டி தொல்லை கொடுத்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை விசாரித்த ஆவடி போலீஸார் அர்னவ் மீது பெண் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

விரைவில் கைது

விரைவில் கைது

இந்த வழக்கை தீவிரமாக போலீஸார் விசாரித்து வரும் சூழலில் நடிகை திவ்யா தரப்பின் வாக்குமூலத்தையும் அர்னவ் தரப்பு வாக்குமூலத்தையும் கேட்டு வருகின்றனர். வன்கொடுமை சட்டம் அர்னவ் மீது பாய்ந்துள்ள நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கே போய் முடியப் போகுதோ

எங்கே போய் முடியப் போகுதோ

சீரியல் நடிகர்களான இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகார் அளித்து வரும் நிலையில், இந்த பிரச்சனை எப்படி, எங்கே போய் முடியப் போகுது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். சமீபத்தில் அர்னவ் நடித்த செல்லம்மா சீரியல் புரமோவிலும் அவரது வாழ்க்கையில் நடக்கும் விஷயத்தை போலவே காட்சிகள் வைத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X