For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நயன்தாரா, அனுஷ்கா, மஞ்சு வாரியர்...நடிகர்களுக்கு இணையாக திரையில் 'கெத்து' காட்டும் நடிகைகள்

By Manjula
|

சென்னை: இன்று உலகம் முழுவதும் மகளிர் தினமானது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தாய்,மனைவி,காதலி, மகள் என்று முழுவதும் பெண்களாலே, ஆண்களின் உலகம் சூழ்ந்து காணப்படுகிறது. அதேபோல பெண்கள் இல்லாத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துத்துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர்.

பெண்களைப் போற்றும் இந்நாளில் நடிகர்களுக்கு ஈடாக திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகைகள் சிலரை பற்றி இங்கே காணலாம்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்குப் பின்னும் கூட தொடர்ந்து கதாநாயகியாகவே தொடர்கிறார். நடிகர்கள் மட்டும் எவ்வளவு வயதானாலும் ஹீரோவாகவே தொடர நடிகைகளுக்கு திருமணம் ஆன அடுத்த நொடியிலேயே அக்கா, அண்ணி வேடங்களைத் தூக்கி கொடுத்து விடுவர். இந்த நிலையை மாற்றி 40 எட்டும் வயதிலும் ஹீரோயினாகவே தொடர்ந்து வருகிறார் ஐஸ். முன்னர் ஹீரோவை சுற்றி டூயட் ஆடிவந்தவர், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வருகிறார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

தமிழனில் விஜய்யை லூசுத் தனமாக காதலித்து அவரை சுற்றி வந்த பிரியங்கா சோப்ராவா இது? என்று பாமரனும் வாயைப் பிளக்கும் அளவிற்கு உலக அளவில் கலக்கி வருகிறார் பிரியங்கா. மேரி கோம் படத்தில் அசரடித்தவருக்கு ஹாலிவுட் வாய்ப்புகள் வந்து காலிங்பெல் அடிக்க குவாண்டிகோ சீரியல் மூலம் சுமார் 47க்கும் மேற்பட்ட நாடுகளில் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது விழாவில் பிரியங்கா விருது வழங்கியது, ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்று அடுத்தடுத்து அம்மணி ரொம்ப பிஸி!

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

பாலிவுட்டின் 100 கோடி நடிகை என்ற புகழை தொடர்ந்து தக்க வைத்த பெருமை தீபிகாவிற்கு உண்டு. பிக்கு, பாஜிரோ மஸ்தானி என்று பாலிவுட்டில் கலக்கியவர் தற்போது ஹாலிவுட்டில் வின் டீசல், பிராட் பிட் என்று அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் ஹேப்பியாக ஹாலிவுட்டை வலம்வந்து கொண்டிருக்கிறார்.

அனுஷ்கா

அனுஷ்கா

ஒரு ஊர்ல ஒரு ராஜா என்று சொல்லி வந்த திரையுலகில் ராணியாக வந்து வரலாற்றை மாற்றிக் காட்டிய பெருமை இவருக்கு உண்டு. ஆரம்ப காலத்தில் ஹீரோவை சுற்றி வந்து காதல் செய்த அனுஷ்காவிற்கு அருந்ததி வந்து ஒரு பெரிய பிரேக்கைக் கொடுக்க பாகுபலி, ருத்ரமாதேவி என்று தொடர்ந்து ராணியாகவே நடிப்பில் அசத்தி வருகிறார். அதிலும் ருத்ரமாதேவி அனுஷ்காவின் அபார நடிப்பிற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்தது. தற்போது பாகுபலி 2 வில் நடித்துக் கொண்டிருக்கும் அனுஷிற்கு, அருந்ததி போன்ற அழுத்தமான கதைகளை வைத்துக்கொண்டு இயக்குநர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர்

கணவர் திலீப்புடன் விவாகரத்து செய்து கொண்ட பின்னர் வீட்டிற்குள் முடங்கி விடாமல் மீண்டும் நடிக்க வந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் மஞ்சு வாரியர். ஹவ் ஓல்ட் ஆர் யூ? என்று மலையாளத்தை கலக்கியவர் தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சொந்த வாழ்வில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்த போதிலும், மனசுக்கு பிடித்து நடித்துக் கொண்டிருப்பதால் மஞ்சு இப்போ ஹேப்பி அண்ணாச்சி என்று தாரளாமாக சொல்லலாம்.

நயன்தாரா

நயன்தாரா

இந்தப் பட்டியலில் நயன்தாராவுக்கும் நாம் ஒரு முக்கிய இடம் கொடுத்துத் தான் ஆகவேண்டும். எத்தனை காதல், எவ்வளவு சர்ச்சை அனைத்தையும் புறந்தள்ளி இன்று 'தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார்' என்று பட்டம் பெறுவதென்றால் சும்மாவா? கடந்த வருடம் தனி ஒருவன், நானும் ரவுடிதான், மாயா என்று ஹாட்ரிக் ஹிட்டடித்தவர் கையில் இந்த வருடமும் ஏராளமான படங்கள் உள்ளன. முன்னர் 2 கோடி வாங்கியவர் இப்போது 4 கோடி வாங்குவதாகக் கேள்வி, தொடர் ஹிட்களால் கேட்கும் பணத்தை கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்களாம். அப்புறம் எதுக்கு கவலைப்படணும்.

திரைத்துறை என்றாலே ஆண்களின் ராஜ்ஜியம் என்ற நிலை மாறி, பெண்களும் தங்களது முக்கியத்துவத்தை பல்வேறு பிரிவுகளிலும் நிலைநாட்டி வருகின்றனர்.

இதேபோல வரும் காலங்களிலும் பெண்கள் திரையுலகில் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று, இந்த மகளிர் தினத்தில் நாம் மனதார வாழ்த்துவோம்!

English summary
Womens's Day Special: Mesmerized&Bold Actress List in Cine Industry- Anushka, Priyanka Chopra, Deepika Padukone, Aishwarya Rai,Nayanthara and Manju Warrior.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more