»   »  என்னை ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டார்: சிம்பு ஹீரோயின் கவலை

என்னை ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டார்: சிம்பு ஹீரோயின் கவலை

Posted By:
Subscribe to Oneindia Tamil
என்னை ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டார்: சார்மி- வீடியோ

சென்னை: தன்னை ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டதாக நடிகை சார்மி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட படங்களில் நடித்து வருபவர் சார்மி. ஹைதராபாத்தில் செட்டில் ஆகியுள்ள அவர் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.

சார்மி தன்னை விட 20 வயது பெரிய திருமணமான இயக்குனர் ஒருவரை காதலிப்பதாக டோலிவுட்டில் பேச்சாக கிடந்தது. இந்நிலையில் காதல், திருமணம் பற்றி சார்மி கூறியிருப்பதாவது.

பிரிவு

பிரிவு

நான் ஒருவரை ரொம்பவே காதலித்தேன். 2 காரணங்களால் நாங்கள் பிரிந்துவிட்டோம். நாங்கள் திருமணம் செய்திருந்தாலும் அதே 2 காரணங்களால் பிரிந்திருப்போம்.

வெறுப்பு

வெறுப்பு

நான் காதலித்த நபரால் திருமணம் மீதே வெறுப்பாக உள்ளது. காதல், திருமணம் மீது நம்பிக்கையை இழந்துவிட்டேன். காதல் முறிவுக்கு பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை.

கணவர்

கணவர்

ஒருவரை காதலித்துவிட்டு இன்னொருவரை திருமணம் செய்து அவருக்காக வாழ்வது முடியாத காரியம். அதனால் நான் திருமணம் செய்யக் கூடாது என்று தீர்மானித்துள்ளேன்.

மாட்டேன்

மாட்டேன்

என்னை காதலித்து ஏமாற்றியவரின் பெயரை தெரிவிக்க மாட்டேன். அவர் நல்லவர் தான். ஆனாலும் என்னை ஏமாற்றிவிட்டார் என்று தெரிவித்துள்ளார் சார்மி.

English summary
Actress cum Producer Charmy Kaur said that she has decided to stay single after a person cheated her in the name of love.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X