»   »  பட வாய்ப்புக்காக நான் அப்படி செய்ய மாட்டேன்: வித்யா பாலன்

பட வாய்ப்புக்காக நான் அப்படி செய்ய மாட்டேன்: வித்யா பாலன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பட வாய்ப்புக்காக நான் அப்படி செய்ய மாட்டேன் என்று பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

வித்யா பாலன் நடிப்பில் அண்மையில் வெளியான தும்ஹாரி சுலு படம் ஹிட்டானது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. வித்யா இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் அவர் தனது சினிமா, வாழ்க்கை குறித்து கூறியதாவது,

நேரம் இல்லை

நேரம் இல்லை

குழந்தை பெற்றுக்கொள்ள நேரம் இல்லை. நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் என் குழந்தை தான். அப்படி பார்த்தால் எனக்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். தற்போது சினிமா மீது மட்டுமே என் கவனம்.

கணவர்

கணவர்

என் பிறந்தநாளை கணவர் சித்தார்த் ராய் கபூர், நண்பர்களுடன் கொண்டாடப் போகிறேன். நல்ல கதை இருந்தால் யார் நடித்தாலும் ஹிட்டாகும் என்பதை ரசிகர்கள் புரிய வைத்துள்ளனர்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

நான் குண்டாகிவிட்டதாக கூறுகிறார்கள். ஆமாம், வெயிட் போட்டுள்ளது. பட வாய்ப்புக்காக நான் உடல் எடையை குறைக்க மாட்டேன். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை திரையில் காட்ட விரும்பும் இயக்குனர்களின் படத்தில் மட்டுமே நடிப்பேன்.

தேவை இல்லை

தேவை இல்லை

வித்யாவை வித்யாவாக மட்டுமே பார்க்கும் இயக்குனர்களின் படங்களில் நடிப்பேன். அதை விட்டுவிட்டு வெயிட்டை குறைக்க சொல்லி அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும் என்பவர்களின் படங்களில் நடிக்க மாட்டேன் என்கிறார் வித்யா பாலன்.

English summary
Vidya Balan said that she doesn't want to lose some kilos just to get movie offers. She is confident of her weight and wants to act in movies that doesn't want her to look slim.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X