»   »  ஊடகம் மூலம் சரத், ராதாரவி கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது: கார்த்தி

ஊடகம் மூலம் சரத், ராதாரவி கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது: கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் ஊடகங்கள் மூலம் கேள்வி கேட்டால் பதில் அளிக்க முடியாது என பொருளாளர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர். சங்க அறக்கட்டளையில் ஊழல் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Won't reply Sarath's questions: Karthi

இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திக்க சரத்குமார் முடிவு செய்துள்ளார். சரத்குமாரின் நீக்கம் குறித்து அவரின் மனைவியும், நடிகையுமான ராதிகா நடிகர் சங்கத்திடம் ட்விட்டரில் பல கேள்விகள் கேட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து சங்கத்தின் பொருளாளர் கார்த்தி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் கடிதம் மூலம் கேள்வி கேட்டால் பதில் அளிக்கப்படும். அவர்கள் ஊடகங்கள் மூலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது.

உரிய ஆதாரங்கள், சாட்சிகளின் அடிப்படையிலேயே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

English summary
Nadigar Sangam treasurer Karthi said that he won't give answers to Sarath Kumar's questions if not asked properly by letter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil