»   »  லாவணிக் கச்சேரி நடத்தும் தமிழ் சினிமா!

லாவணிக் கச்சேரி நடத்தும் தமிழ் சினிமா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் - திரையரங்கு உரிமையாளர்களுக்கிடையில் கடந்த ஒரு வார காலமாக வாட்ஸ்அப்பில் பெரும் வார்த்தை யுத்தம் நடந்து வருகிறது.

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் படங்களைத் திரையிட அதிக பட்ச கட்டணங்களை அந்நிறுவனங்கள் வசூலித்து வருவதை கைவிடக் கோரியும், கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் நீண்ட காலமாகக் கேட்டு வந்தனர்.

Word of war among Tamil cinema producers

இது சம்பந்தமாக பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. டிஜிட்டல் நிறுவனங்ககள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள மறுத்து வருகின்றன. இதனால் மார்ச் 1 முதல் புதிய தமிழ் படங்ககளை ரீலீஸ் செய்ய வேண்டாம் என தன் உறுப்பினர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மார்ச் 1 முதல் புதிய படங்களை திரையிடாதது, டிஜிட்டல் நிறுவனங்களுடன் என்ன பிரச்சினை, தயாரிப்பாளர்கள் தரப்பு நியாயங்களை உரிய விளக்கங்களுடன் ஆதாரபூர்வமாக எஸ்ஆர் பிரபு (தயாரிப்பாளர் சங்க பொருளாளர்) முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதற்கு நேரடியாக பதில் சொல்வதைத் தவிர்த்து தமிழ் பட தயாரிப்புத் துறை நலிவடைந்ததற்கும், நஷ்டம் தொடர்வதற்கு காரணம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள்தான் காரணம் என்று ஆடியோ பதிவு ஒன்றை பிரபல விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணி மீண்டும் வெளியிட்டிருக்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் எஸ்ஆர் பிரபு வெளியிட்டிருக்கும் ஆடியோ பதிவில் டிஜிட்டல் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதற்காக தயாரிப்பாளர்களுக்கு புரியும் மொழியில் பதிவை வெளியிட்டேன். இதில் எந்த வகையிலும் தொடர்பு இல்லாலாத திருப்பூர் சுப்பிரமணி சம்மன் இல்லாமல் ஆஜராக வேண்டிய அவசியம் என்ன எனக் கேட்டிருக்கிறார். இந்த பிரச்சிசினை முடிந்த பின் வியாபாரத்திற்கு ஏற்ப சம்பளம், விகிதாச்சார அடிப்படையில் நடிகர்களுக்கு சம்பளம் கொடுப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

English summary
There is a strong word of war between Tamil cinema producers in whatsapp on heroes salary issue

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil