»   »  உலக ஹலோ தினம்: ஹலோ ஹலோ ஹலோ

உலக ஹலோ தினம்: ஹலோ ஹலோ ஹலோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக ஹலோ தினமான இன்று ஹலோ என துவங்கும் சில பாடல்களை கேட்டு ரசிக்கலாமே.

ஆண்டுதோறும் நவம்பர் 21ம் தேதி உலக ஹலோ தினமாக கொண்டாடப்படுகிறது. பத்து பேருக்கு ஹலோ சொல்லி நீங்களும் இந்த தினத்தை கொண்டாடலாம்.

எகிப்து மற்றும் இஸ்ரேல் இடையே போரை முடிவுக்கு கொண்டுவர, அந்நாட்டு மக்கள் இடையே சண்டை மறைந்து சமாதானம் ஏற்படும் விதமாக 1973 ஆம் ஆண்டில் முதன் முதலாக உலக ஹலோ தினம் கொண்டாடப்பட்டது. இன்றைக்கு 180க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹலோ தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஹலோ ஹலோ என துவங்கும் சில பாடல்களை கேட்டு மகிழலாமே.

ஹலோ ஹலோ சுகமா

தர்மம் தலை காக்கும் படத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் போனிலேயே ஹலோ ஹலோ சுகமா என்று கேட்டு காதல் வளர்த்தார்கள்.

ஹலோ மை டியர் ராங் நம்பர்

உலக நாயகன் கமல் ஹாஸன் நடித்த மன்மத லீலை படத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த படத்தில் கமல் ஜெயபிரதாவுடன் போனில் ஹலோ மை டியர் ராங் நம்பர் என பாடுவார்.

ஹலோ ஹலோ ஹலோ

மோனிஷா என் மோனாலிசா படத்தில் ஹீரோ ஹீரோயினான மும்தாஜ் கண்ணில் படாமலேயே காதல் செய்து விபத்தில் சிக்கி பலியாகிவிடுவார். அந்த படத்தில் ஹீரோ மும்தாஜுக்கு போன் செய்து ஹலோ ஹலோ ஹலோ என பாடுவார்.

ஹலோ டாக்டர் ஹார்ட்டு வீக்காச்சு

எந்த கல்லூரியில் ஃபேர்வெல் நடந்தாலும் காதல் தேசம் படத்தில் வரும் முஸ்தபா முஸ்தபா பாடல் கண்டிப்பாக கேட்கும். அந்த படத்தில் ஹலோ என துவங்கும் பாடலும் உள்ளது.

ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோ

வலியவன் படத்தில் ஜெய் ஆண்ட்ரியாவை பார்த்து ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோ என்று பாடுவார். வலியவனா என்று கேட்காதீர்கள். அப்படி ஒரு படம் ரிலீஸானது பாஸ்.

ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி

இருவர் படத்தில் ஐஸ்வர்யா ராய் தனது காந்த கண்ணால் ஈர்க்கும் ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி என்ற பாடல் ஒரு காலத்தில் மிகவும் பிரபலம்.

ஹலோ மிஸ்டர் காதலா

நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் மகேஸ்வரி, மீனா என்ற இரண்டு கவர்ச்சிப் புயல்கள் பிரபுதேவாவை தாக்கும் பாடல் ஹலோ மிஸ்டர் காதலா.

English summary
As today is World Hello day, let's hear some songs that begin with the word Hello.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil