»   »  இஷ்டத்துக்கும் டிக்கெட் விற்பனை... சீட் இல்லை.. லோலோவென அலைய வைக்கும் சென்னை திரைப்பட விழா!

இஷ்டத்துக்கும் டிக்கெட் விற்பனை... சீட் இல்லை.. லோலோவென அலைய வைக்கும் சென்னை திரைப்பட விழா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரைப்பட விழாக்கள் என்றால் முன்பெல்லாம் தியேட்டர்கள் காத்து வாங்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஜோல்னா பைகள் தட்டுப்படும். விரல் விட்டு எண்ணக்கூடிய சினிமா பிரபலங்கள் பார்க்க வருவார்கள்.

இப்போது அப்படியில்லை. நல்ல கூட்டம் வருகிறது. அரசு தரும் பண உதவி, ஸ்பான்சர்கள், டிக்கெட் விற்பனை என ஏகத்துக்கும் கல்லா கட்டுகிறார்கள் இந்த பெஸ்டிவல்காரர்கள்.

Worst seating arrangement in Chennai Film Festival

ஆனால் ஏற்பாடு சுத்த மோசம். படம் பார்க்க ரூ 850 கொடுத்து பாஸ் எடுத்தவர்கள், சிறப்பு அனுமதி பாஸ் பெற்றவர்கள், ஸ்பான்சர் டிக்கெட் வைத்திருப்பவர்கள், பத்திரிகையாளர்கள் என யாருக்கும் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால், மணிக்கணக்கில் தியேட்டர் வாசல்களில் காத்திருக்க வேண்டியுள்ளதாம். ஏதோ டென்ட் கொட்டகையில் குவிவது போல முண்டியடித்து உள்ளே போய் கிடைத்த சீட்டை கப்பென பிடித்துக் கொள்வதால், விஐபி பாஸ் வைத்திருக்கும் சினிமாகாரர்களுக்குக் கூட சீட் கிடைப்பதே கஷ்டம் என்றாகிவிட்டது.

இன்று பிற்பகல் பேலஸோவில் போட்ட ஒரு படத்துக்கு வந்திருந்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் உட்கார சீட் கிடைக்காமல் முன்வரிசையில் போய் அமர்ந்தார். இத்தனைக்கும் அவர் ரொம்ப நேரத்துக்கு முன்பே வந்து தியேட்டரில் காத்திருந்தார்.

Worst seating arrangement in Chennai Film Festival

இந்தப் படங்களுக்கு இவ்வளவு கூட்டம் குவிய இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது. பெரும்பாலான படங்கள் டபுள் ஏ சான்று தரக்கூடிய அளவுக்கு மேட்டர் படங்களாகவே இருக்கின்றன. சென்சார் பண்ணாமல் அப்படியே திரையிடுவது பற்றி அத்தனைப் பேருக்கும் தகவல் தெரிந்துவிட்டது போலிருக்கிறது. அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள்.

English summary
Ticket and pass holders of Chennai Film Festival have suffered due to worst seating arrangement
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil