எதற்கும் துணிந்தவன்...வழக்கமான பாண்டிராஜ் படமா? இல்லை மாஸ் காட்டும் சூர்யா படமா?
சென்னை : டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் நாளை தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. படத்தின் கதை பற்றி பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது வழக்கமான பாண்டிராஜ் படமாக இருக்குமா, அதிரடி ஆக்ஷன் நிறைந்த சூர்யா படமாக இருக்குமா என அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி எழுகிறது.
Recommended Video
தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி, குடும்ப ஆடியன்சை கவர்ந்த டைரக்டர்களில் பாண்டிராஜும் ஒருவர். பசங்க என்ற குழந்தைகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படத்தை எடுத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படமே பேசப்பட்ட படமாக அமைந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த நிறைவு ஏற்படுவதாக அனைவரும் கூறினர்.

பாண்டிராஜ் ஸ்டையில்
வழக்கமாக பாண்டிராஜ் படங்கள் என்றாலே குடும்ப உறவுகளை, அதிலும் கூட்டு குடும்பம், உறவுகளின் அருமையை சொல்லும் படமாக இருக்கும். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து அவர் கடைசியாக இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை கூட குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டது தான். குடும்பங்களை பற்றி பேசினாலும் அதோடு ஸ்டிராங்கான மெசேஜ் ஒன்றையும் அவர் சொல்லி இருப்பார்.

குழப்பத்தில் ரசிகர்கள்
ஆனால் எதற்கும் துணிந்தவன் படம் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை என சொல்லப்படுகிறது. இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான ஒரு அழுத்தமான கருத்தை கொண்டு, அனைவரும் வரவேற்கும் விதமாக க்ளைமாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் டிரைலர், டீசர் ஆகியவற்றை பார்க்கும் போது அதில் வழக்கமான பாண்டிராஜ் படத்தில் இருப்பது போல் குடும்ப உறவுகள், காமெடி எல்லாம் இருக்கும் என தெரிகிறது. இதனால் இது பாண்டிராஜ் படமா இல்லை சூர்யா படமா என்ற குழப்பம் அனைவரிடமும் ஏற்பட்டது.

எதற்கும் துணிந்தவன் எப்படி
எதற்கும் துணிந்தவன் வழக்கமான பாண்டிராஜ் படமாக இல்லையாமல் சற்று வித்தியாசமாக இருக்கும் என அவரே கூறி உள்ளார். பாண்டிராஜ் படங்களில் பொதுவாக புகைப்பிடிக்கும் காட்சிகள் இருக்காது. ஆனால் இந்த படத்தில் வில்லன் வினய் ராய் கேரக்டருக்கு அது தேவையாக இருப்பதால் சில இடங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம். இது சூர்யாவின் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருந்தாலும், பாண்டிராஜ் படங்களில் இருக்கும் குடும்ப உறவு, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் இருக்குமாம்.

செம மெசேஜா இருக்கே
சூர்யா ரசிகர்களை தாண்டி குடும்ப ஆடியன்ஸ் கொண்டாடும் படமாக எதற்கும் துணிந்தவன் இருக்கும் என கூறப்படுகிறது. சரியான மெசேஜ் உடன், சரியான சமயத்தில் ரிலீஸ் செய்யப்படும் சரியான படம் எதற்கும் துணிந்தவன் என படக்குழு இது பற்றி கூறுகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இந்த படம் மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











