»   »  அப்பா கமல் கூட நடிக்க ரெடி, ஆனால் அதுக்கு...: அக்ஷரா ஹாஸன்

அப்பா கமல் கூட நடிக்க ரெடி, ஆனால் அதுக்கு...: அக்ஷரா ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பா கமல் ஹாஸனுடன் சேர்ந்து நடிக்க தயார் என்று அக்ஷரா ஹாஸன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஆகும் ஆசையில் கேமராவுக்கு பின்னால் நின்ற உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா நடிகையாகிவிட்டார். இயக்குனர் ஆசையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் அஜீத்தின் விவேகம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அப்பா

அப்பா

அப்பா கமல் ஹாஸனுடன் சேர்ந்து நடிக்க தயாராக உள்ளேன். ஆனால் எங்களுக்கு ஏற்ற கதை கிடைக்க வேண்டுமே. அந்த கதை எங்கள் இருவருக்கும் பிடித்திருக்க வேண்டும் என அக்ஷரா தெரிவித்துள்ளார்.

சபாஷ் நாயுடு

சபாஷ் நாயுடு

கமல் ஹாஸன் நடித்து வரும் சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் அக்ஷரா ஹாஸன். கடந்த ஆண்டு கமலுக்கு காலில் காயம் ஏற்பட்டதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

விவேகம்

விவேகம்

அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் விவேகம் படத்தை அக்ஷரா பெரிதும் எதிர்பார்க்கிறார். இந்த படத்தில் அக்ஷரா அஜீத்தின் உதவியாளராக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்தி

இந்தி

அக்ஷரா தனுஷ் நடித்த ஷமிதாப் இந்தி படம் மூலம் ஹீரோயின் ஆனார். அந்த படம் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் அக்ஷரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படமும் ஓடவில்லை.

English summary
Actress Akshara Haasan says she would love to work with her father Kamal Haasan, provided an interesting script comes along. "I would love to work with my father but a suitable script should come our way. It should be something interesting for both of us to come together," said Akshara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil