twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதிய சாதனை: 6000 அரங்குகளில் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்!

    By Shankar
    |

    சென்னை: உலக அளவில் எந்த நடிகரின் படமும் வெளியாகாத அளவுக்கு 6000 திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் வெளியாகிறது!

    இந்திய நடிகர்கள் என்றில்லை.. சர்வதே அளவில் வைத்துப் பார்த்தாலும் இது ஒரு புதிய சாதனைதான்!

    சர்வதேச அளவில் வசூலைக் குவித்து முதலிடத்தில் இருக்கும் அவதார் படம்தான் சாதனை அளவாக 10 ஆயிரம் அரங்குகளுக்கு மேல் வெளியானது. அதன் பிறகு வந்த படங்களில் அவெஞ்சர்ஸ், தி டார்க் நைட் ரைசஸ் அதிக அரங்குகளில் வெளியாகின.

    ஹாலிவுட் படங்களுக்கு அடுத்து, அதிக அரங்குகளில் வெளியாகும் வெளிநாட்டுப் படம் கோச்சடையான்தான்!

    ரஜினியின் எந்திரன் 3300 அரங்குகளில் வெளியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின் வந்த சில பாலிவுட் படங்கள் - க்ரிஷ் 3, தூம் 3- கிட்டத்தட்ட 4000 அரங்குகளில் வெளியானதாக அறிவிக்கப்பட்டன.

    இப்போது அத்தனை படங்களின் சாதனைகளையும் ஒன்றுமில்லாமல் செய்யும் விதத்தில் ரஜினியின் கோச்சடையான் 6000 ப்ளஸ் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக ஈராஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தப் படத்தின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகவிருக்கிறது. மற்ற மொழிகளில் தயாராகியிருக்கும் கோச்சடையானும் வெளியாகிறது.

    தென்கிழக்காசிய நாடுகளான ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், சீனா, கொரியாவில் அதிக அரங்குகளில் கோச்சடையான் வெளியாகவிருக்கிறது.

    அமெரிக்கா, ஐரோப்பாவில் இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு 1000க்கும் அதிகமான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் மும்முரம் காட்டுகிறது ஈராஸ் நிறுவனத்தின் அய்ங்கரன் இன்டர்நேஷனல்.

    தெலுங்கில் மட்டும் 1000 அரங்குகளுக்கு மேல் கோச்சடையானின் தெலுங்கு வடிவமான விக்ரமசிம்ஹாவுக்கு ஒதுக்கப்பட உள்ளன.

    இன்று ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கோச்சடையான் தியேட்டர்கள் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால்... ஏப்ரல் 11 கோச்சடையான் தினமாக உலகெங்கும் பரபரக்கும் என்பதில் சந்தேகமில்லை!

    English summary
    Rajini's Kochadaiiyaan will be hits 6000 plus screens worldwide.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X