வாவ்...செம...நம்ம அஜித்தா இது...ஏகே 61 லுக்கா... வேற லெவலில் மிரட்டுறாரே

சென்னை : ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம ஹேண்ட்சம் லுக்கிற்கு மாறி உள்ள அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வெளியாகி, செம டிரெண்டிங் ஆகி வருகிறது. இது ஏகே 61 படத்திற்கான மற்றொரு லுக்கா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசானது. வசூல் சாதனை படைத்து வரும் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல விமர்சனங்கள், பிரச்சனைகளை தாண்டி ரசிகர்கள் இந்த படத்திற்கு நல்ல ஆதரவு வழங்கி வருகின்றனர். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.250 கோடிகளை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2 வாரங்களில் ஏகே 61

2 வாரங்களில் ஏகே 61

வலிமை படம் பெற்றுள்ள பிரம்மாண்ட வெற்றியால் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் அடுத்து நடிக்க உள்ள ஏகே 61 அல்லது அஜித்குமார் 61 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் 2 வாரங்களில் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் துவங்கப்படும் என கூறப்படுகிறது. பிரம்மாண்ட பூஜையுடன் ஐதராபாத்தில் துவங்கும் முதல் கட்ட ஷுட்டிங்கிற்காக சென்னை அண்ணாசாலையை செட்டாக அமைத்துள்ளனர்.

ஏகே 61 கதை இதுதான்

ஏகே 61 கதை இதுதான்

படத்தின் பூஜையன்றே டைட்டிலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு வல்லமை என பெயரிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஏகே 61 படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். ஹீரோ - வில்லன் என இரு வேடங்களில் அஜித் நடிக்கும் இந்த படம் வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட கதையாம். மங்காத்தா படத்திற்கு பிறகு கொள்ளை கும்பல் தலைவனாக நெகட்டிவ் ரோலில் அஜித் நடிக்க போகிறார். இரு ரோல்களில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக வில்லன் ரோலிற்காக நீண்ட வெள்ளை தாடி, காதில் கடுக்கன் என செம வில்லன் கெட்அப்பிற்கு மாறி உள்ளார் அஜித்.

எடையை குறைக்கும் அஜித்

எடையை குறைக்கும் அஜித்

ஏகே 61 வில்லன் கெட்அப்பில் அஜித் இருக்கும் போட்டோக்கள் சமீபத்தில் வெளியாகி செம வைரலாகின. அதோடு ஏகே 61 படத்திற்காக 25 கிலோ எடையை குறைக்கவும் அஜித் பிளான் செய்திருப்பதாகவும், இதில் 10 கிலோ ஏற்கனவே குறைந்து விட்டதாகவும் கூறினார்கள். வில்லன் ரோலிற்காக தற்போதுள்ள எடையில், வயதான தோற்றத்திலும், ஹீரோ ரோலுக்காக எடை குறைந்து, இளமை தோற்றத்திற்கும் அஜித் மாற போவதாக கூறினார்கள். ஏகே 61 பற்றிய இந்த அடுத்தடுத்த தகவல்கள் அனைவருக்கும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்தது.

வாவ்...நம்ம அஜித்தா இது

வாவ்...நம்ம அஜித்தா இது

இந்நிலையில் எடை குறைந்து, இளமை தோற்றத்திற்கு மாறி உள்ள அஜித்தின் போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்து அனைவரும் மிரண்டு போய் உள்ளனர். கண்ணாடி அணிந்து, ஸ்லிம் தோற்றத்தில் செம ஹேண்ட்சமாக இருக்கிறார் அஜித். ஹேர் ஸ்டைலையும் மாற்றி உள்ளார். 20 வருடங்களுக்கு முன் அஜித்தை பார்த்தது போல் உள்ளது. இதை பார்த்து அனைவரும் வாயடைந்து போய் உள்ளனர்.

எடிட்டிங் செய்யப்பட்ட போட்டோவா

எடிட்டிங் செய்யப்பட்ட போட்டோவா

வழக்கம் போல் இந்த போட்டோவையும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லைக்குகளை குவித்து, வைரலாக்கி வருகின்றனர். அதே சமயம் இது எடிட் செய்து வெளியிடப்பட்ட போட்டோ என சிலர் கலாய்த்து வருகின்றனர். அதை கண்டு கொள்ளாமல் பலரும், எப்படி இப்படி ஒரு தோற்றத்திற்கு மாறினார்... வில்லன் கெட்அப்பும் சரி, இந்த இளமை தோற்றமும் சரி வேற லெவலில் உள்ளதே. அப்போ படம் எப்படி இருக்கும் என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X