ஆட்டத்தை துவக்கிய பீஸ்ட்...நோ டீசர்...ஸ்டிரைட்டா டிரைலர் தான்...எப்போ வருது?

சென்னை : பீஸ்ட் டீசர் வெளியீடு பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கையில், நேராக டிரைலர் வர போவதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரைலர் பற்றிய தகவல்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது. படத்தின் வெளியீட்டு உரிமம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், ரஜினி படம் இல்லாமல் மற்ற நடிகரின் படம் இவ்வளவு அதிகமான தொகைக்கு விற்கப்படுவது இது தான் முதல் முறை என்கிறார்கள்.

5 மொழிகளில் பீஸ்ட்

5 மொழிகளில் பீஸ்ட்

பீஸ்ட் படத்தை பான் இந்தியன் படமாக வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பீஸ்ட் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான போஸ்டர்கள் நேற்று வெளியிடப்பட்டன. தென்னிந்திய மொழிகளில் பீஸ்ட் என்று இருக்க, இந்தியில் மட்டும் இந்த படத்திற்கு 'ரா' என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் படத்தில் விஜய் ரா ஏஜென்ட்டாக நடித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டீசர் எப்போப்பா வரும்

டீசர் எப்போப்பா வரும்

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால் ப்ரோமோஷன் வேலைகளை எப்போது துவக்க போகிறார்கள். டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். பீஸ்ட் படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா கிடையாது என சொல்லி விட்டதால் டீசரையாவது வெளியிடுங்கள் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இதற்காக ட்விட்டரில் உருவாக்கப்பட்ட BeastTeaser ஹேஷ்டேக் கடந்த ஒரு வாரமாக டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

டீசருக்கு பதில் டிரைலரா

டீசருக்கு பதில் டிரைலரா

பீஸ்ட் டீசர் வெளியிட போகிறார்களா, இல்லையா என தெரியவில்லை. அதே சமயம் மார்ச் 31 ம் தேதி பீஸ்ட் டிரைலர் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம். ஏப்ரல் 2 ம் தேதி யுகாதி பண்டிகையை முன்னிட்டு பீஸ்ட் டிரைலர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளிலும் டிரைலரை ஒரே நாளில் வெளியிட போகிறார்களாம்.

வேற லெவல் பிளானா இருக்கே

வேற லெவல் பிளானா இருக்கே

ஆடியோ ரிலீசில் விஜய்யின் பேச்சை கேட்க ஆவலாக காத்திருந்த ரசிகர்களை ஏமாற்ற கூடாது என்பதால் ப்ரொமோஷன் விழாவில் விஜய் கலந்து கொண்டு பேச அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருவதால் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ப்ரொமோஷன் வேலைகள் துவங்கப்படும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X