»   »  லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கேம்மா: மூச்சுமுட்ட வைக்கும் வாரிசு நடிகை

லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கேம்மா: மூச்சுமுட்ட வைக்கும் வாரிசு நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
மூச்சுமுட்ட வைக்கும் ஷிவானி ராஜசேகர்.

ஹைதராபாத்: பல திறமைகளுடன் சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வருகிறார் ஷிவானி ராஜசேகர்.

நடிகர் ராஜசேகர், நடிகை ஜீவிதாவின் மூத்த மகள் ஷிவானி மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். படித்துக் கொண்டே படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

2 ஸ்டேட்ஸ் இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கிறார் ஷிவானி. இந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறியிருப்பதாவது,

இன்ஸ்பிரேஷன்

இன்ஸ்பிரேஷன்

அப்பா தான் என் இன்ஸ்பிரேஷன். பிரபலமான நடிகரான பிறகும் அவர் டாக்டர் தொழிலை விடவில்லை. நோயாளிகள் அவரை மேஜிக்மேன் என்று அழைப்பார்கள். நான் அவரை தான் பின்பற்றுகிறேன்.

மருத்துவம்

மருத்துவம்

எனக்கு மிகவும் பிடித்த இரண்டு விஷயம் மருத்துவம் மற்றும் நடிப்பு. நான் நல்ல டாக்டராகவும், அருமையான நடிகையாகவும் இருப்பேன் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

பாக்சிங்

பாக்சிங்

நான் குச்சிப்புடி கற்றுள்ளேன், கதகளி கற்றுக் கொண்டிருக்கிறேன், பெல்லி டான்ஸும் கற்கிறேன். கீ போர்டு வாசிக்கத் தெரியும், கிட்டார் வாசிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன். கர்நாடக இசை கற்றுள்ளேன். ஒரு நாள் படங்களில் பாட்டு பாடும் ஆசையும் உள்ளது. கிக் பாக்சிங்கும் கற்று வருகிறேன்.

அறிவுரை

அறிவுரை

குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு முன்பு நடிக்கிறோம் என்று நினைத்துக் கொள். அப்படி நினைத்தால் கேமராவுக்கு முன் நிற்கும்போது பயம் இல்லாமல் சிறப்பாக நடிக்க முடியும். நாம் எப்படி நடித்தாலும் குடும்பத்தாரும், நண்பர்களும் நம்மை வெறுக்க மாட்டார்கள் என்ற அப்பாவின் அறிவுரையை பின்பற்றுகிறேன்.

சமந்தா

சமந்தா

என் அப்பா தான் என் ரீல் மற்றும் ரியல் ஹீரோ. நான் அம்மா மாதிரி இருக்கிறேன் என்று யாராவது கூறினால் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது உள்ள நடிகைகளில் எனக்கு சமந்தாவை மிகவும் பிடிக்கும் என்கிறார் ஷிவானி.

English summary
Shivani Rajasekhar has come to the film industry after learning Kuchipudi, kathak, belly dancing. She knows how to play the keyboard and trained in carnatic music also.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X