»   »  எனக்கு இதை விட வேறு என்ன வேண்டும்: துள்ளிக் குதிக்கும் ஆர்த்தி, காரணம்...

எனக்கு இதை விட வேறு என்ன வேண்டும்: துள்ளிக் குதிக்கும் ஆர்த்தி, காரணம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகை ஆர்த்தி செம மகிழ்ச்சியில் உள்ளார்.

சென்னை: நடிகை ஆர்த்தி செம மகிழ்ச்சியில் உள்ளார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக சுமார் 350 நடிகர், நடிகைகள் மலேசியா சென்று நட்சத்திர கலைவிழாவை நடத்தினார்கள். அதை இங்கேயே நடத்தியிருந்தால் பயண செலவை மிச்சப்படுத்தி கட்டிட பணிக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

சரி விடுங்க, அவர்கள் மலேசியா என்று தீர்மானித்து நடத்திவிட்டார்கள் இனி பேசி என்ன பயன்.

ரஜினி

நடிகை ஆர்த்தி மலேசியா சென்றபோது விமானத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

குரு

குரு

கொடுத்த வாக்கை நிச்சயம் காப்பாற்றுவேன் குரு என்று ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார் ஆர்த்தி. அப்படி என்ன வாக்கு என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.

புகைப்படம்

மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடந்தபோது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாஸனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும் என்று ட்வீட்டியுள்ளார் ஆர்த்தி.

கண்கள்

இதனால் என்ன பயன் என்று ரஜினி, கமல் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஒருவர் ஆர்த்தியிடம் கேட்டார். அதற்கு அவரோ, இது பயனுக்கு அல்ல,,, திருப்திக்காக..என் இரண்டு கண்கள் என்று பதில் அளித்துள்ளார்.

English summary
Actress Harathi is on cloud nine as she has taken a picture with her two eyes namely Kamal Haasan and Rajinikanth at the Nadigar Sangam function held in Malaysia. She has shared her happiness with fans on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X