»   »  அப்படி இருந்தவரா இப்படி ஆகிவிட்டார்: டான்ஸ் மாஸ்டரை பார்த்து வியக்கும் திரையுலகம்

அப்படி இருந்தவரா இப்படி ஆகிவிட்டார்: டான்ஸ் மாஸ்டரை பார்த்து வியக்கும் திரையுலகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டரான கணேஷ் ஆச்சார்யா ஒன்றரை ஆண்டுகளில் 85 கிலோ எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

தமிழகத்தில் பிறந்து ஒடிஷாவில் வளர்ந்து பாலிவுட்டில் பிரபலமாக உள்ளவர் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா. கணேஷின் பெயரை சொன்னால் அவரது குண்டான உருவம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும்.

Wow, what a transformation Ganesh Acharya!

ஏபிசி படத்தில் கூட பிரபுதேவாவின் நண்பராக நடித்திருந்தார். இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு மனிதர் என்னமா டான்ஸ் ஆடுகிறார் பார் என்று வியக்காதவர்களே இல்லை.

அப்படி குண்டாக இருந்தவர் ஒன்றரை ஆண்டுகளில் 85 கிலோ எடையை குறைத்துவிட்டார். தான் உடல் எடையை குறைத்த வரலாற்றை அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலமாக விளக்கியுள்ளார்.

Wow, what a transformation Ganesh Acharya!

தற்போது கணேஷை பார்ப்பவர்கள் அப்படி இருந்த நீங்களா இப்படி ஆகிவிட்டீர்கள் என்று வியந்து கேட்கிறார்கள்.

English summary
Popular Bollywood choreographer Ganesh Acharya has lost 85 kgs in just 1.5 years. His transformation is really really amazing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil