»   »  சிவாஜியோட ராஜராஜ சோழன் பாத்திருப்பீங்க.. அஜித்தின் ராஜேந்திர சோழனைப் பார்க்க ரெடியா?

சிவாஜியோட ராஜராஜ சோழன் பாத்திருப்பீங்க.. அஜித்தின் ராஜேந்திர சோழனைப் பார்க்க ரெடியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து தமிழில் சரித்திரப் படங்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர் விஜய் புலி படத்தில் நடித்தார். தற்போது அஜித்தும் சரித்திரப்படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித்தை வைத்து ‘பில்லா', ‘ஆரம்பம்' ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் தனது அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளில் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

இந்தப் படத்தின் நாயகன் அஜித் என முன்பே உறுதியான தகவல்கள் வெளியானது.

சரித்திரப்படம்...

சரித்திரப்படம்...

இந்தப் புதிய படமானது சரித்திர பின்னணி கொண்டது. இதற்கான கதை விவாதத்தில் விஷ்ணுவர்த்தன், எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறார்.

சோழ மன்னராக...

சோழ மன்னராக...

இந்நிலையில், தற்போது இந்தப் படத்தில் அஜித் நடிப்பது பாலகுமாரன் மூலம் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. சரித்திரப்படமான இதில் அஜித் சோழ மன்னராக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாலகுமாரன்...

பாலகுமாரன்...

இது குறித்து பாலகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘அஜித்துக்காக கதை எழுதுவது உண்மைதான். ஆனால் தஞ்சை பெரியகோயில் பற்றிய கதையோ, ராஜராஜ சோழனைப் பற்றிய கதையோ அல்ல.

சோழ மன்னர் கதை...

சோழ மன்னர் கதை...

ஆனால் ஒரு சோழ மன்னரைப் பற்றிய கதை என்பதை மட்டும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியும்‘ எனத் தெரிவித்திருக்கிறார்

சிறுத்தை சிவா...

சிறுத்தை சிவா...

அஜித் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படம் முடிவடைந்ததும், இந்த சரித்திரப் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜேந்திர சோழன்...

ராஜேந்திர சோழன்...

பாலகுமாரன் சமீபத்தில் ராஜேந்திர சோழன் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். எனவே, தற்போது அவர் அஜித்துக்காக உருவாக்கி வருவதாக கூறப்படும் சோழ மன்னர் கதை ராஜேந்திர சோழனுடையது தான் எனக் கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலகுமாரனும், அஜீத்தும்..

பாலகுமாரனும், அஜீத்தும்..

அஜீத்தும், பாலகுமாரனும் இணைவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 1997ம் ஆண்டு உல்லாசம் படத்தில் பாலகுமாரன்தான் வசனம் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
A few months ago director Vishnuvardhan had revealed that he was working with senior Tamil writer Balakumaran for a period flick set in the 9th century AD. Ever since the news came out, there were widespread speculations that Ajith Kumar will be acting in the lead role in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil