இந்தியன் 2 படத்தின் கதை என்ன தெரியுமா? எழுத்தாளர் ஜெயமோகன் சொன்ன சுவாரசியத்தகவல்!
சென்னை : இந்தியன் 2 திரைப்படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் பல சுவாரசியத் தகவல்களை தெரிவித்துள்ளார்.
1996ம் ஆண்டு இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவானத் திரைப்படம் தான் இந்தியன். ஊழல் எதிர்ப்பு திரைப்படங்களுக்கு முன்னோடியாக வெளியான இந்த திரைப்படம், பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தது.
அன்றைய காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் நிலையை ஒப்பிட்டால் இது வியக்கவைக்கும் இமாலய சாதனை. இந்தப் படமும் இதற்குக் கிடைத்த வெற்றியும் ஷங்கரின் இமேஜை தூக்கி நிறுத்தியது.

இந்தியன் 2
இந்தியன் திரைப்படம் அளித்த உத்வேகத்துடன் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக படம் நிறுத்தப்பட்டது. அதன் பின் கொரோனா, படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஷங்கர், ராம்சரணை வைத்து 'RC15' படப்பிடிப்பில் கவனம் செலுத்தினார். கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மெகாஹிட் அடித்த நிலையில், இந்தியன் 2 படத்தின் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது

கமல் பட்டினி கிடந்து நடிக்கிறார்
இந்நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் அளித்துள்ள பேட்டியில், இந்தியன் 2 படம் குறித்து பல சுவாரசியமானத் தகவல்களை தெரிவித்துள்ளார். இதில், இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசன் பட்டினி கிடந்து நடிக்கிறார். வாயில் எதை மென்றாலும், அது மேக்கப்பை கெடுத்துவிடும் என்பதால், ஸ்ட்ராவில் ஜூஸ்சை மட்டுமே குடித்து வருகிறார். இதைப்பார்க்கும் போது எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கும் என்றார் .

சுவாரசியமான கதை
இந்தியன் இரண்டாம் பாகமும் முதல் பாகத்தைப் போல பீல் குட் கொண்ட படம் தான். ஆனால், இந்தியன் 2 படத்தின் கதை கொஞ்சம் பின்னால் போகும், அதாவது சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாக நடந்த கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. சொல்லப் போனால் இந்தியன் தாத்தா என்ற சேனாதிபதிக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை. இந்த படத்தில் இந்தியன் தாத்தாவின் அப்பா வருவார் என்றார்.

3 மணி நேரப்படம்
மேலும், இந்தியன் 2 படத்திற்கு 3 மணி நேரம் 10 நிமிடங்கள் நீளம் கொண்ட படம் என்றும், இது ஷங்கரின் கேரியரில் மிக நீண்ட திரைப்படமாக இப்படம் இருக்கும் என்றும் இந்தியன் 2 படம் குறித்து பல சுவாரசியமானத் தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











