twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தின் அசல் அவர்கள் தான்... இரட்டையர்கள் சொல்லும் ரீவைண்ட் மெம்மரீஸ்!

    |

    சென்னை : எழுத்தாளர்கள் சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் இணைந்து பல பல கதைகள் எழுதி பல விதமான சாதனை செய்து தமிழ் சினிமா மட்டும் அல்லாது இந்தியா சினிமாவிற்கே பெரும் பெயர் வாங்கி கொடுத்து உள்ளனர். சுபா என்ற பெயரில் இந்த இரட்டையர்கள் செய்த சாதனை பெரிய பட்டியலே போடலாம் . சமீபத்தில் சுரேஷ் தன் சினிமா அனுபவங்களை பலவகையில் பகிர்ந்து வருகிறார் . குறிப்பாக பிரபு தேவா நடிப்பில் மீனா மிகவும் கவர்ச்சியாக நடித்த நாம் இருவர் நமக்கு இருவர் படம் பற்றி சில சுவாரசியங்கள் ...

    Recommended Video

    கொரோனா ஒரு கொரில்லா யுத்தம் | கவிஞர் வைரமுத்து |FILMIBEAT TAMIL

    அது ஒரு ஜனவரி மாதம். என் தந்தையின் திதி நாள். சடங்குகள் முடிந்து உணவருந்த அமர்ந்திருந்த மத்தியானப் பொழுது. தொலைபேசி அழைத்தது. (அப்போதெல்லாம் அலைபேசி கிடையாது. Landline தான்)

    எடுத்தது என் அம்மா."உனக்குதான் ஃபோன்.." என்றார். ரிசீவரை வாங்கினேன்."நான் டைரக்டர் சுந்தர். சி பேசறேன்.." என்றது எதிர்முனைக் குரல்.திகைத்தேன். 'உள்ளத்தை அள்ளித் தா..!' திரைப்படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றிருந்த சமயம். ரஜினியை வைத்து, 'அருணாசலம்' என்கிற படத்தை இயக்குநர் சுந்தர். சி இயக்கிக்கொண்டிருந்த வேளை.

    "வணக்கம் சார்.." "சுபா சார், நான் உங்க ஃபேன்.." நம்பவில்லை. யாரோ நண்பன் விளையாடுகிறான் என்று தோன்றியது.

    சேலையிலும் செம.. அள்ளும் அழகில் பிரபல நடிகையின் ஆச்சரிய லுக்.. வாவ் என வாய்பிளக்கும் ரசிகர்கள்!சேலையிலும் செம.. அள்ளும் அழகில் பிரபல நடிகையின் ஆச்சரிய லுக்.. வாவ் என வாய்பிளக்கும் ரசிகர்கள்!

    பொய்யென்று நினைத்து

    பொய்யென்று நினைத்து

    "நன்றி சார்.." என்றேன். "ஒரு படம் விஷயமா உங்ககிட்ட பேசணுமே..! நாளைக்கு மீட் பண்ணலாமா..?" "எங்க வரணும் சார்..?" "அடையாறுல .. திருவதாங்கூர் அரண்மனையில அருணாசலம் ஷூட்டிங் நடந்துட்டிருக்கு.. அங்க வர முடியுமா..? பொய்யென்று நினைத்துதான் ஃபோனை வைத்தேன். அடையாறு எங்கள் பேட்டை. மறுநாள் அங்கு சென்றோம். ரஜினிகாந்த், வடிவுக்கரசி ஆகியோர் பங்கு கொண்ட படப்பிடிப்பு அங்கு நடந்துகொண்டிருந்தது. இயக்குநர் சுந்தர்.சி எங்களை அன்போடு வரவேற்று அமரச் சொன்னார்.

    சூப்பர் ஸ்டாரிடம்

    சூப்பர் ஸ்டாரிடம்

    "உங்க கதைகள்லாம் ரசிச்சுப் படிப்பேன். ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கு வாய்ப்பு வந்திருக்கு. டபிள் ஹீரோ சப்ஜெக்ட். நீங்க எழுதின கதை ஏதாவது பொருத்தமா இருந்தா சொல்லுங்க.. இல்லேன்னா, புதுசா ஒரு கதை சொன்னாலும் சரி. நாம சேர்ந்து செய்வோம்.." "ஐடியாவோட ரெண்டு நாள்ல மீட் பண்றோம்.." என்றோம். பரபரப்பான படப்பிடிப்பில் ஓர் இடைவெளி வந்த போது, சூப்பர் ஸ்டாரிடம் சுந்தர்.சி, எங்களை அறிமுகம் செய்துவைத்தார்.

    கிழக்குக் கடற்கரைச் சாலை

    கிழக்குக் கடற்கரைச் சாலை

    "ஓ..! நைஸ்..!" என்று ரஜினி கை குலுக்கினார். கை குலுக்கிய வேகத்திலேயே மறந்துபோயிருப்பார் என்று நினைத்தோம். எங்களுடைய அடுத்த சந்திப்பு, கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு பங்களாவில் நடந்தது. அதுவும் அருணாசலம் படப்பிடிப்பு. அங்கு வந்திருந்த திரு கிரேஸி மோகனை ஏற்கெனவே தெரியும் என்பதால், அவருடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

    சாதுவாகத் தோன்றும் சூப்பர் ஸ்டார் ‘

    சாதுவாகத் தோன்றும் சூப்பர் ஸ்டார் ‘

    நேரில் மிக சாதுவாகத் தோன்றும் சூப்பர் ஸ்டார் கேமிரா வழியே பார்த்தால், எப்படி திடீரென்று அவ்வளவு சக்திமிக்கவராக மாறுகிறார் என்று அதிசயித்துக்கொண்டு அமர்ந்திருந்தோம். ரஜினி எங்களைக் கடக்கையில் ஒரு பரிச்சயப் புன்னகை சிந்தினார். உணவு இடைவேளையில் சுந்தர்.சி உரையாடினார். இரண்டு ஹீரோக்கள் பங்குகொள்ளும் வகையில் எங்களிடம் சில கதைகள் இருப்பதாகச் சொன்னோம். அவர் என்ன மாதிரியான கதையை எதிர்பார்க்கிறார் என்று கேட்டோம்.

     ஏ.எம். ரத்தினம்

    ஏ.எம். ரத்தினம்

    "நாகார்ஜுனா, பிரபுதேவா ரெண்டு பேரையும் வெச்சு தமிழ், தெலுங்கு ரெண்டு மொழிலயும் ஒரு மெகா படம் பண்ணலாம்னு சூர்யா மூவீஸ்ல கேட்டிருக்காங்க.. ரெண்டு ஹீரோவுக்கும் சமமா பங்கு இருக்கணும்.." அன்றைய தேதியில், தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் அவர்கள் பெயரோ, சூர்யா மூவீஸ் என்ற பெயரோ திரையில் வந்தாலே கைதட்டுவார்கள். அந்த அளவு அவர் பிரபலம்.

    முழு திருப்தி

    முழு திருப்தி

    சுந்தர்.சி எங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைத் தெளிவாக விளக்கினார். அடுத்த சில நாட்கள் நானும், பாலாவும் கடற்கரைகளில் அமர்ந்து, சில கதைக்கருக்களை விவாதித்துத் தீர்மானித்தோம். திரு. ஏ.எம். ரத்தினம் அவர்கள் நடத்திய பிரமாண்டமான ஐயப்பன் பூஜைக்குக் கூட்டிப்போய் அவரையும் எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார், சுந்தர்.சி. நாங்கள் சொன்ன முதல் இரண்டு கதைகள் சுந்தர்.சிக்கு முழு திருப்தி அளிக்கவில்லை.

    சினிமாவுக்கு ஏத்தபடி

    சினிமாவுக்கு ஏத்தபடி

    மூன்றாவதாக நாங்கள் ஒரு கதையை விவரித்துச் சொன்னபோது, "எக்ஸலண்ட்..!" என்றார். "நாம இதை பண்றோம்.. இப்ப அவுட்டோர் போறேன். பதினஞ்சு நாள் ஊர்ல இருக்க மாட்டேன்.. அந்த நேரத்துல கதையை இன்னும் ஷார்ப்பா, சினிமாவுக்கு ஏத்தபடி மாத்துங்க.." என்று தன் உதவி இயக்குநர்களை அறிமுகம் செய்து வைத்தார். காட்சி அமைப்புகளைத் தீட்டித் தயார் செய்து, இரு வாரங்கள் கழித்து நாங்கள் மீண்டும் அவரைச் சந்தித்தபோது, கதையை ரசித்தார். கைகொடுத்துப் பாராட்டினார்.

     தொடர்பைக் கத்தரிக்க

    தொடர்பைக் கத்தரிக்க

    இரண்டு நாட்களில் மீண்டும் சந்தித்தபோது, "ஸாரி, சார்.. ஒரு சின்ன பிரச்சன.." என்றார்."நாகார்ஜுனா, பிரபுதேவா ரெண்டு பேரோட தேதிகளும் பொருந்திவந்து, படத்தை எடுத்து முடிக்கணும்னா, கொறைஞ்சபட்சம் பத்துலேர்ந்து பன்னெண்டு மாசம் ஒதுக்கணும் போல இருக்கு. ஒரு வருஷத்துல மூணு படம் எடுக்கறவன் நான்.. வருஷம் முழுக்க ஒரே ஒரு படத்துல ஹீரோ கால்ஷீட்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு லாக் ஆயிடக்கூடாதுன்னு பார்க்கிறேன்.." என்றார். அந்தப் படம் கதை விவாதத்தோடு அப்படியே நின்றுபோனது. ஆனால், சுந்தர். சி எங்களுடைய தொடர்பைக் கத்தரிக்க விரும்பவில்லை.

    சிங்கம்புலியைச் சந்தித்தோம்

    சிங்கம்புலியைச் சந்தித்தோம்

    அவர் அடுத்து இயக்கவிருந்த ‘நாம் இருவர், நமக்கு இருவர்..' திரைப்படத்துக்கு வசனங்கள் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். வங்கிப்பணி முடிந்து, தினமும் மாலையில் மோட்டார் சைக்கிளில் ஜெமினி லேப் அருகிலிருந்த அவருடைய அலுவலகத்துக்குச் சென்றுவிடுவோம். கதை விவாதம் இரவு ஒன்பது, பத்து வரை தொடரும். அங்கேதான் இன்றைக்கு இயக்குநராகவும், நடிகராகவும் இருக்கும் சிங்கம்புலியைச் சந்தித்தோம். பேச்சிலேயே நல்ல நகைச்சுவைகொண்டவர் சிங்கம்புலி.பேசியதை எழுதுவதற்கு எவ்வளவு நாட்களாகும் என்று நாங்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்க.. "அடுத்த வாரம் ஊட்டில ஷூட்டிங்.. நீங்களும் வரீங்க.." என்று தடாலென்று சொல்லிவிட்டார் சுந்தர்.சி. ஊட்டியில் சற்றும் எதிர்பாராத வேறொரு பிரச்சனையை நாங்கள் சந்தித்தோம்

    சில நடிகைகளிடம் கதை

    சில நடிகைகளிடம் கதை

    சுற்றிலும் தோட்டமும், புல்வெளியும், குளிர்காற்றும் சூழ்ந்த ஒரு மாபெரும் பங்களாவில் படப்பிடிப்பு. சுந்தர். சி இயக்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். படத்தில் இரண்டு நாயகிகள். முதல் நாயகி மகேஸ்வரி என்று தீர்மானமாகிவிட்டது. இரண்டாவது நாயகி யார் என்று முடிவாகாதபோது, சில நடிகைகளிடம் கதை சொல்வதற்கு எங்களையே அனுப்பி வைத்தார், சுந்தர். சி. இறுதியாக, மீனா அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தார்.

    கிரிக்கெட் விளையாட

    கிரிக்கெட் விளையாட

    பொதுவாக டென்ஷன் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்பது இயக்குநர் எண்ணம். எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் பற்றி அவர் முழுமையான தீர்மானத்தில் இருந்ததால், அவருக்கு டென்ஷன் இல்லை. ஆனால் எங்களுக்கு ... நாங்கள் முழுப்படத்துக்கும் வசனம் எழுத முனைந்தபோது, "அதெல்லாம் வேண்டாம் சார்.. அப்பப்ப எழுதிக்கலாம்.." என்று சொல்லிவிட்டார். குறைந்தபட்சம் முந்தின நாளாவது வேலையை முடித்துவிட வேண்டும் என்று நாங்கள் விரும்பி, "நாளைக்கு என்ன காட்சி..?" என்று கேட்டால், "எதுக்கு சார் டென்ஷனாறீங்க..? ஜாலியா இருங்க.. நாளைக்குக் காலையில பார்த்துக்கலாம்.." என்று சிரித்துக்கொண்டே எங்களையும் கிரிக்கெட் விளையாட இழுத்துச் சென்றுவிடுவார்.

    எடிட்டிங் மேஜையில்

    எடிட்டிங் மேஜையில்

    என்னுடைய அதிகப்பிரசங்கித்தனத்தால், ஒரு சிக்கல் உருவானது.ஒருநாள் ஜோசியர் பாத்திரமேற்று நடிக்க வேண்டியவர் வராததால், பாலாவை அந்தப் பாத்திரத்தில் நடிக்கக் கேட்டுக்கொண்டார், சுந்தர்.சி. மீசையை எடுத்துவிட்டு, வேட்டி கட்டி, மேலே சட்டை இல்லாமல் சைக்கிளில் பாலா வந்து இறங்கி குடும்பத்தாருடன் தோட்டத்தில் அமர்ந்து பேசுவதாகக் காட்சி. திறந்தவெளியில் சுரீர் என்று எலும்பைத் தொடும் காற்று வீசிக்கொண்டிருந்தது. காட்சியின் இடையில் கேமிராக் கோணம் மாற்றுவதற்கு ஒளிப்பதிவாளர் நேரம் எடுத்துக்கொண்டார். பாலா குளிரில் நடுங்குவாரே என்று எனக்குக் கவலை. ஒரு கம்பளிச் சால்வையைக் கொண்டுபோய்க் கொடுத்து போர்த்திக்கொள்ளச் சொன்னேன். "பரவாயில்லை" என்று பாலா சொன்னபோதும், வற்புறுத்தி நானே போர்த்திவிட்டு வந்தேன்.விளைவு? படப்பிடிப்பெல்லாம் முடிந்து எடிட்டிங் மேஜையில் திடீரென்று பாதிக்காட்சியில் பாலாவின் தோளில் மாயாஜாலமாக அந்தச் சால்வை தோன்றியதும், இயக்குநர் சிரித்துக்கொண்டே என்னைத் திரும்பிப் பார்க்க, பாலா ஆவேசமாக முறைத்தான். பின்னே? மறுபடியும் மீசை இழந்தல்லவா காட்சித் தொடர்ச்சிக்கு வழிசெய்ய வேண்டும்..?

    அடையாளம் கண்டுகொண்டு

    அடையாளம் கண்டுகொண்டு

    ஊட்டி தவிர, கோவை, பொள்ளாச்சி, சென்னை என்று படப்பிடிப்பு தொடர்ந்தது. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் சில வாசகர்கள் எங்களை சுபா என்று அடையாளம் கண்டுகொண்டு, ஆட்டோகிராஃப் கேட்டு வருவார்கள். நடிகர் நடிகைகள் மத்தியில் நமக்கும் மதிப்பிருக்குடா என்று ஏக கர்வம் எனக்கு. இயக்குநர் வேறு ‘ஜமாய்ங்க' என்பதுபோல் சைகை செய்வார். படபடவென்று என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய இரு இளைஞர்கள் "புதுமுகமா? என்ன வேஷம் கட்றீங்க, சார்..?" என்று கேட்க..சுந்தர்.சி வாய்விட்டுச் சிரித்த காட்சி இப்போதும் கண்முன் ஆடுகிறது.

    இரு சூர்யாக்களைக் குறிப்பிடும்

    இரு சூர்யாக்களைக் குறிப்பிடும்

    பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்தபோது, மதிய உணவு இயக்குநர் மணிவண்ணன் வீட்டிலிருந்து வரும். அவர் இப்படத்தில் நடிகர். எனக்கும், பாலாவுக்கும் சைவ உணவு தனியாக அவர் வீட்டிலிருந்து வரும். எப்போதும் சேர்ந்தே காணப்பட்டதால், "செட் தோசை" என்று எங்களைப் பற்றி மணிவண்ணன் கேலியாகக் குறிப்பிடுவார். (பிற்பாடு மாற்றானில் இரு சூர்யாக்களைக் குறிப்பிடும் வசனமாக அதைச் சேர்த்தோம்). வசனங்கள் எப்படி நச்சென்று அமையவேண்டும் என்று ஒருமுறை மணிவண்ணன் உதாரணங்களோடு விளக்கிச் சொன்னது இன்றைக்கும் நினைவிருக்கிறது.

    பேங்க வேலையை விடுங்க

    பேங்க வேலையை விடுங்க

    மணிவண்ணன் மட்டுமல்ல, ஜெமினி கணேசன், விவேக், செந்தில், எஸ்.எஸ். சந்திரன், பிரபுதேவா, மீனா, மகேஸ்வரி, மஞ்சுளா என்று அத்தனை நடிகர்களும் எங்களோடு அன்பாகப் பழகிய காலம் அது. படப்பிடிப்போடு நிறுத்திக் கொள்ளாமல், எடிட்டிங் பணியின் போதும், எங்களை அருகில் அமர்த்திக் கொண்டு அந்த அனுபவம் கிடைக்கவும் சுந்தர். சி வழிசெய்தார்.நாம் இருவர் நமக்கு இருவர் படம் வெளிவந்ததும், "மொதல்ல உங்க பேங்க் வேலைய ரிஸைன் பண்ணுங்க, சார்.. சினிமாவுக்கு முழு நேரமும் குடுங்க.." என்று சுந்தர்.சி அன்புடன் சொன்னார்.

    English summary
    Writer Suresh shared Interesting impressions about 'Naam iruvar Namakku iruvar'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X