Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கதையை திருடினாரா லிங்குசாமி.. சீமான் அளித்த பரபரப்பு புகார்.. தள்ளுபடி செய்த எழுத்தாளர்கள் சங்கம்!
சென்னை: சீமான் - லிங்குசாமி இடையிலான கதை பிரச்சனைக்கு கதை ஆசிரியர்கள் சங்கம் முடிவுகட்டியுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லிங்குசாமி. ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
மை நேம் ஈஸ் ஸ்ருதி... த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஹன்சிகா... கதை கேட்டு மிரண்ட ஹன்ஸ்
தொடர்ந்து ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

திரைப்பட எழுத்தாளர் சங்கம்
தற்போது இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். நடிகர் ராம் அதில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்நிலையில் அந்தக் கதை தான் பதிவு செய்து வைத்துள்ள பகலவன் படத்தின் கதை என சீமான் தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் ஒரு புகார் அளித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தப் புகாரை அடுத்து லிங்குசாமியை விசாரித்த பாக்யராஜ் தலைமையிலான குழுவினர் 2013-ஆம் ஆண்டில் ஏற்கனவே சீமான் - லிங்குசாமி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால் தற்போதைய புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று சீமானின் புகாரை தள்ளுபடி செய்துள்ளனர்.

மாதவன் சொன்ன விஷயம்
இருவரும் ஒரே மாதிரியான கதையை எழுதியது எப்படி என்பது குறித்த கேள்விக்கும் விடை கிடைத்துள்ளது. அதாவது நடிகர் மாதவன், தனக்கு தெரிந்த உண்மை சம்பவம் ஒன்றை இருவரிடமும் கூறியுள்ளார்.

கற்பனையுடன் கதை
அந்த முடிச்சை இருவரும் தங்களின் கற்பனையுடன் சேர்த்து கதையாக்கியுள்ளனர். அதனாலேயே இருவரும் அந்த கதை தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடி வந்துள்ளனர்.

அப்போதே பிரச்சனை
கடந்த 2014ஆம் ஆண்டே சூர்யாவை வைத்து இந்த கதையை படமாக்க முயற்சி செய்துள்ளார் லிங்குசாமி. ஆனால் அப்போதும் அது தன்னுடைய கதை என்று சீமான் பிரச்சனை எழுப்பியுள்ளார்.

7 ஆண்டுகள் ஆகியும்
இதனை தொடர்ந்துதான் மாற்றாக ஒரு மும்பை தாதா கதையை மையப்படுத்தி அஞ்சான் படத்தை இயக்கினார் லிங்குசாமி. அந்த கதையை வைத்து தான் படம் இயக்கப்போவதாக கூறிய சீமான், 7 ஆண்டுகள் ஆகியும் இயக்கவில்லை.

லிங்குசாமி மீது புகார்
ஆகையால் ஒப்பந்தத்தின் படி தற்போது அந்த கதையை வைத்து தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை இயக்கும் பணியில் இறங்கினார் லிங்குசாமி. இதனை தொடர்ந்துதான் லிங்குசாமி மீது புகார் கொடுத்துள்ளார் சீமான்.