»   »  கடம்பனில் அப்பா-மகளுடன் சேர்ந்து நடிக்கும் ஆர்யா!

கடம்பனில் அப்பா-மகளுடன் சேர்ந்து நடிக்கும் ஆர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒய்.ஜி.மகேந்திரன் அவரது மகள் மதுவந்தி இருவரும் ஆர்யாவின் 'கடம்பன்' படத்தில் சேர்ந்து நடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அப்பா-மகன் சேர்ந்து நடிப்பது சகஜமான ஒன்று. ஆனால் அப்பா-மகள் சேர்ந்து நடிப்பது அரிதான விஷயம்.


Y.G.Mahendran and Madhuvanthi Play in Kadamban

தற்போது அந்த அரிதான சம்பவம் ஆர்யாவின் படத்தில் நடந்திருக்கிறது. பெங்களூர் நாட்கள் படத்துக்குப் பின் மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.


பழங்குடி இனத்தவராக ஆர்யா நடிக்கும் இப்படத்துக்கு கடம்பன் என்று பெயரிட்டுள்ளனர். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்தரின் தெரசாவும், வனத்துறை அதிகாரி வேடத்தில் மதுவந்தியும் நடித்து வருகின்றனர்.


மதுவந்தியின் உதவியாளர் வேடத்தில் அவரது தந்தை ஒய்.ஜி.மகேந்திரன் நடித்து வருகிறார். இதன் மூலம் ஒரே படத்தில் அப்பா ஒய்.ஜி.மகேந்திரனும், மகள் மதுவந்தியும் நடித்து வருகின்றனர்.


இதில் ஆர்யாவுக்கு எதிரானவராக மதுவந்தி நடிப்பதால் அவரது வேடம் பெரிதும் பேசப்படும் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இப்படத்துக்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்து ஆர்யா முரட்டுத்தனமாக உடலை ஏற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Y.G.Mahendran and her Daughter Madhuvanthi Play a key role in Arya's Kadamban.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil