கோச்சடையான் வெளியாகவிருந்த அரங்குகளில் யாமிருக்க பயமே!

By Shankar

நாளை கோச்சடையான் வெளியாகவிருந்த திரையரங்குகள் பலவற்றில் யாமிருக்க பயமே படத்தை வெளியிடுகிறார்கள்.

ரஜினியின் கோச்சடையான் படம் நாளை உலகெங்கும் வெளியாகவிருந்தது. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் அந்தப் படத்தை வெளியிட முடியாத நிலையில், மே 23-க்கு படத்தைத் தள்ளிப் போட்டதாக திடீரென நேற்று மாலை அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அந்தப் படம் வெளியாகவிருந்த அரங்குகள் பலவற்றில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள யாமிருக்க பயமே படத்தை வெளியிடுகின்றனர்.

அந்தப் படத்தைப் பொருத்தவரை இது பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், வேறு சமயத்தில் இந்தப் படம் வந்திருந்தால் சுமாரான அரங்குகள்தான் கிடைத்திருக்கும். இந்த அளவு நல்ல அரங்குகளோ, முக்கியத்துவமோ கிடைத்திருக்காது.

Yamirukka Bayame in Kochadaiiyaan theaters

கோச்சடையான் வெளியாவது தாமதமாவதை லேசாக மோப்பம் பிடித்ததுமே, இந்தப் படத்தை வெளியிடுவதாக அறிவித்துவிட்டார் எல்ரெட் குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X