எல்லோரும் கேஜிஎஃப் 2- வை பாராட்டுறாங்க...ஆனா ராக்கி பாய்க்கு இந்த தமிழ் படம் தான் பிடிச்சதாம்
சென்னை : உலகமே கேஜிஎஃப் 2 படத்தையும், அதன் வசூல் சாதனையையும் பாராட்டி, கொண்டாடி வருகின்றனர். ஆனால் கேஜிஎஃப் ஹீரோ யாஷ், தமிழில் இந்த படம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக கூறி பாராட்டி உள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கன்னட டைரக்டர் பிரசாந்த் நீல், 2018 ம் ஆண்டு இயக்கிய கேஜிஎஃப் சாப்டர் 1 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தை இயக்கினார். இந்த படம் ஏப்ரல் 14 ம் தேதி 5 மொழிகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. உலகம் முழுவதும் 10,000 தியேட்டர்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்தனர்.

4 நாட்களில் 500 கோடி வசூல்
கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தை அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பார்த்து விட்டு ஆஹா, ஓஹோ என புகழ்ந்து வருகிறார்கள். அதற்கு ஏற்றாற் போல் ரிலீசான 4 நாட்களில் கேஜிஎஃப் 2 படம் 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வார இறுதி நாட்களில் பாகுபலி 2 வசூல் சாதனையை அசால்டாக அடித்து நொறுக்கி உள்ளது கேஜிஎஃப் 2.

கேஜிஎஃப் 2 வசூல் சாதனை
ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படம் தான் இதுவரை வசூலில் நம்பர் ஒன்னாக உள்ளது. இந்த படம் வசூலித்த 1800 கோடியை கேஜிஎஃப் 2 மிக குறுகிய காலத்திலேயே கடந்து விடும் என்றும், ஆர்ஆர்ஆர் படம் 15 நாட்களில் எட்டிய 1000 கோடி வசூல் சாதனையையும் கேஜிஎஃப் 2 ஒரே வாரத்தில் பெற்று விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேஜிஎஃப் சாப்டர் 3 யும் இயக்கப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளதால், கேஜிஎஃப் 2 படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

ராக்கி பாய் ரசித்த தமிழ் படம்
தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் கேஜிஎஃப் 2 படத்தை பார்த்து விட்டு பாராட்டினார்கள். அதே போல் நடிகர் சிவகார்த்திகேயனும் ட்விட்டரில் படத்தையும், யாஷின் நடிப்பையும் பாராட்டி இருந்தார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்த யாஷ், நன்றி பிரதர். உங்களின் டாக்டர் படம் பார்த்து மிகவும் என்ஜாய் பண்ணினேன். அது நல்ல படம். எனக்கு பிடித்திருந்தது என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலுக்கு சிவகார்த்திகேயனும், தேங்க் யூ பிரதர். நீங்கள் டாக்டர் படத்தை விரும்பி பார்த்தது மகிழ்ச்சி என பதிலளித்துள்ளார்.

இந்த படத்தை பார்ப்பாரா யாஷ்
யாஷின் இந்த ட்வீட் செம வைரலாகி வருகிறது. யாஷ் தமிழ் படங்களையும் விரும்பி பார்ப்பதை ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படம் மே மாதம் ரிலீசாக உள்ளது. இதையும் யாஷ் பார்ப்பாரா என ஆர்வமாக ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். தற்போது எஸ்கே 20 படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கில் பிஸியாக உள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்கே 21 படத்தில் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











