Don't Miss!
- News
கைக்குழந்தைக்கு "தனி டிக்கெட்" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அட்வான்ஸ் புக்கிங்கில் அதிரடி... பீஸ்ட் ஏமாற்றத்தை சாதகமாக்கிக் கொள்ளுமா கேஜிஎப் 2?
சென்னை : நடிகர் விஜய் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்தப் படத்துடன் இணைந்து நாளைய தினம் சர்வதேச அளவில் கேஜிஎப்2 படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் பீஸ்ட் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ள ஏமாற்றத்தை கேஜிஎப் 2 சாதகமாக்கிக் கொள்ளுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பீஸ்ட் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவை போரா ?...பீஸ்ட் படத்திற்கு எதிராக வழக்கு

விஜய்யின் பீஸ்ட்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் பீஸ்ட் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் அதிரடியை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. தனது முந்தைய படங்களில் செய்த மேஜிக்கை இந்தப் படத்தில் தர தவறியுள்ளார் நெல்சன்.

யுக்திகளை கையாளாத நெல்சன்
விஜய் போன்ற மாஸ் ஹீரோவை இயக்க பல யுக்திகள் தெரிந்திருக்க வேண்டும். முதல் இரண்டு படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை பதற்றமே இல்லாமல் காமெடி, சிறப்பான காட்சிகள் மூலம் சிறப்பான வெற்றிப்படங்களாக ஆக்கியிருந்தார் நெல்சன். அதேபோல விஜய் படத்தையும் இயக்கியுள்ளார்.

அதிகமான காமெடி
அது விஜய் படத்திற்கு கைக்கொடுக்கவில்லை. பீஸ்ட் படத்திலும் காமெடியையே கைக்கொண்டுள்ளார் நெல்சன். எவ்வளவு நேரத்திற்குதான் காமெடியையே பார்த்துக் கொண்டிருப்பது என்று ரசிகர்கள் ஒரு கட்டத்தில் சலிப்படைந்ததன் விளைவுதான் தற்போது பீஸ்ட் ப்ளாப் என்று பெயர் வாங்கியுள்ளது.

தாக்கத்தை ஏற்படுத்தாத பீஸ்ட்
ஆனால் முன்னதாக அட்வான்ஸ் புக்கிங் உள்ளிட்டவற்றின் மூலம் படம் தனது வசூலை எடுத்துவிடும் என்றாலும் அது விஜய்க்கான ரசிகர்களின் அன்பால் மட்டுமே சாத்தியப்படும். மாறாக படம் எந்தவிதமான தாக்கத்தையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தவில்லை. விமர்சகர்களும் படத்தின் நிறை குறைகளை சரியாக அலசி விமர்சனத்தை அளித்துள்ளனர்.

ட்ரெண்டான ஃப்ளாப்
இந்நிலையில் படம் ப்ளாப் என்ற ட்ரெண்டிங்கே இப்போது ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நாளைய தினம் யஷ் நடிப்பில் கேஜிஎப் சாப்டர் 2 படம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் சிறப்பான வசூலையும் வரவேற்பையும் அதிர்வையும் ஏற்படுத்தியிருந்தது.

கேஜிஎப் சாப்டர் 2 படம்
இந்நிலையில் நாளைய தினம் படத்தின் இரண்டாவது பாகம் ரிலீசாக உள்ளது. ஏற்கனவே இந்த இரு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசாவது குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில், இரண்டு படங்களும் அதனதன் ரசிகர்களை கொண்டுள்ளதாகவும் இரண்டுமே சிறப்பான வெற்றி பெறும் என்றும் யஷ் தெரிவித்திருந்தார்.

அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ.65 கோடி
இந்தப் படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. இந்திய அளவில் அட்வான்ஸ் புக்கிங்கில் 28 மாநிலங்களில் 27 மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது கேஜிஎப் 2. அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே படம் 65 கோடி ரூபாயை முதல் நாளிலேயே பெற்றுள்ளது.

ரூ.100 கோடியை தாண்டும்
இந்நிலையில் படம் கண்டிப்பாக முதல் நாள் கலெக்ஷனிலேயே 100 கோடி ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பீஸ்ட் படத்திற்கு வந்த விஜய் ரசிகர் ஒருவர், கேஜிஎப் 2 படத்திற்கே சென்றிருக்கலாம் என்று கமெண்ட் செய்திருந்தார். இதையடுத்து கேஜிஎப் படம் அதிரி புதிரி வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் ஏமாற்றத்தை சாதகமாக்குமா?
பீஸ்ட் படம் மிகச்சிறந்த வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் தற்போது சொதப்பியுள்ள நிலையில், அதை கேஜிஎப் சாப்டர் 2 படம் சிறப்பான வகையில் பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பும் படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.