Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ராக்கி பாயை கலகலப்பாக்கிய பாடல்...தீயாய் பரவும் யாஷ் மகளின் வீடியோ
சென்னை : கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷின் மகள் பாடிய பாடல் வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
கன்னட ராக்கிங் ஸ்டாரான யாஷ், கேஜிஎஃப் படத்திற்கு பிறகு பான் இந்தியன் ஸ்டாராகி விட்டார். கேஜிஎஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தீப்பொறி
பறக்க
மாஸ்
காட்டும்
யாஷ்...
'’கேஜிஎஃப்
2
மேக்கிங்
வீடியோ’’

கேஜிஎஃப் 2 வசூல் சாதனை
ஏப்ரல் 14 ம் தேதி ரிலீசான கேஜிஎஃப் 2 படம் உலகம் அளவில் 1000 கோடிகள் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. இந்த பட்டியலில் இணையும் நான்காவது இந்திய படம் இது. அது மட்டுமல்ல 1000 கோடி வசூலை ஈட்டிய முதல் கன்னட படமும் கேஜிஎஃப் 2 தான். இந்த படம் கர்நாடகாவில் இதுவரை 149.50 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதனால் இன்று 150 கோடி வசூலை எட்டி மற்றொரு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் கேஜிஎஃப் 3
படம் ரிலீசாகி இரண்டு வாரங்கள் ஆகி விட்ட போதிலும் தற்போது வரை சோஷியல் மீடியா முழுவதும் கேஜிஎஃப் 2 பற்றியும், யாஷ் பற்றிய பேச்சுமாக தான் உள்ளது. விரைவில் கேஜிஎஃப் 3 படத்தை இயக்க உள்ளதாக டைரக்டர் பிரசாந்த் நீல் அறிவித்துள்ளார். ஆனால் கேஜிஎஃப் 3 படத்திற்கான சில சீன்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக யாஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
|
யாஷ் மகளின் க்யூட் பாடல்
கேஜிஎஃப் 2 படத்திற்கு பிறகு யாஷ் என சொன்னவர்களை விட ராக்கி பாய் என அவரை கூப்பிட்டவர்கள் தான் அதிகம். ரசிகர்கள் மட்டுமல்ல யாஷின் மகளும் அவரை ராக்கி பாய் என்று தான் கூப்பிட்டுள்ளார். யாஷின் மகள் ஆய்ரா, சலாம் ராக்கி பாய் பாடலை தனது மழலை குரலில், க்யூட்டாக பாடி அசத்தி உள்ளார். இந்த வீடியோவை யாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ராக்கி பாயின் மந்திரம்
அதோடு, தினம் காலையில் கேட்கும் மந்திரம். ராக்கி பாய்(Boy)யை சந்தோஷமாக்கும் விஷயம் என அழகாக கேப்ஷன் பதிவிட்டுள்ளார். யாஷ் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. லைக்குகளும் குவிந்து வருகிறது. யாஷ் அடிக்கடி தனது குழந்தைகளுடன் விளையாடுவது, சாப்பாடு ஊட்டுவது, ஜாலியான தருணங்களை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

யாஷின் காதல் திருமணம்
மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ராமாசாரி படத்தில் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்ததால், அதற்கு பிறகு நடிகை ராதிகா பண்டிட் மற்றும் யாஷ் இருவரும் காதலிப்பதாக மீடியாக்களில் செய்தி பரவியது. அதற்கு பிறகு 2016 ல் இவர்களின் திருமணம் நடைபெற்றது. பெங்களூரு அரண்மனையில் நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பிற்கு அனைவரையும் ஓப்பனாக அழைத்திருந்தார் யாஷ். இந்த தம்பதிக்கு ஆய்ரா என்ற மகளும், யாதர்வ் என்ற மகனும் உள்ளனர்.