பிக்பாஸ் யாஷிகாவுக்கு பைத்தியமா? வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்!
யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் பாடல் பாடும் வீடியோ வைரலாகிறது.
சென்னை: யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருவிளையாடல் படத்தில் சிவாஜி பாடியதைக் கேட்டுமுடித்தவுடன் 'அசையும் பொருள் நிற்கவும், நிற்கும் பொருள் அசையவும்... இப்படி ஒரு பாட்டை கத்தினேன் என்கிறாய்' என்பார் பாலையா.

இப்போது ஐஸ்வர்யா தத்தாவும், யாஷிகாவும் செய்திருக்கும் செயலைப் பார்க்க பாலையா இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது. கழுத்து சுளுக்கு வருமளவுக்கு காட்டு கத்து கத்திவிட்டு சொந்தமாக கம்போஸ் செய்த பாடல் என பதிவிட்டுள்ளனர்.
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் இரண்டாம் இடம் பெற்றவர் ஐஸ்வர்யா. இவரும் சக போட்டியாளரான யாஷிகா ஆனந்தும் சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
நீ இல்லையினால்... நீ இல்லையினால்.. என்ற இரண்டு வார்த்தையை மட்டும் கத்தி கத்தி டான்ஸ் ஆடுகின்றனர். இதை செல்பி வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள யாஷிகா 'ஐஸ்வர்யாவுடன் ஃபன் பண்றேன். ரொமாண்டிக் பாடல் ஃபன் ஆந்தமாக மாறிய தருணம்' என அவர்கள் கத்தும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
மேலும், உங்களுடைய சிறந்த நண்பர்களை டேக் செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். யாரையாவது பழிவாங்க நினைத்தாலோ, யாராவது கடனை திருப்பித் தராமல் ஏமாற்றும் நண்பர்கள் இருந்தாலோ அவர்களை நீங்கள் தாராளமாக டேக் செய்யுங்கள். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் பைத்தியம் என கமண்ட்ஸ் தட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications











