கையில் வாக்கிங் ஸ்டிக்குடன்… கடை திறப்பு விழாவிற்கு வந்த யாஷிகா !
சென்னை : விபத்திற்கு பிறகு முதல் முறையாக வெளியே வந்துள்ள யாஷிகா ஆனந்த், மீண்டும் தனது படப்பிடிப்பு பணிகளை தொடங்க உள்ளதாக கூறியுள்ளார்.
Recommended Video
சென்னையில் நேற்று நடைபெற்ற கடை திறப்பு விழாவில் யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டார்.
எப்போதும் கவர்ச்சி உடையில் கலக்கும் யாஷிகா தன கையில் ஸ்டிக்குடன் தாங்கி தாங்கி நடந்து வந்தார்.

யாஷிகா
கவர்ச்சி கன்னியாக வலம் வந்து இளசுகளில் இதயத்தில் தனி இடம் பிடித்தார் யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இந்த வீட்டில் குட்டி குட்டி பவுசர் போட்டுக்கு ரசிகர்களை ஏக்க பெருமூச்சுவிடவைத்தார். இதனால், யாஷிகாவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது.

பிக்பாஸ் வீட்டில்
பிக் பாஸ்வீட்டிலிருந்து வெளியே வந்த இவருக்கு பட வாய்ப்புகள் வந்த அதில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார். புதுச்சேரியில் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு, சென்னை திரும்பிக்கொண்டு இருக்கும் போது கார் விபத்துக்குள்ளனது.

காலில் முறிவு
இந்த கோர விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகாவுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் பிழைத்தார். இருப்பினும் காலி ஏற்பட்ட முறிவு காரணமாக கடந்த 3 மாதங்களாக எழுந்து நடக்க முடியாது படுக்கையிலே ஓய்வு எடுத்து வருகிறார்.

கையில் ஸ்டிக்குடன்
3 மாத போராட்டத்திற்கு பிறகு, முதன்முறையாக சென்னையில் ஒரு கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். மஞ்சள் நிற உடையில் கையில் ஸ்டிக்குடன் தாங்கி தாங்கி நடந்து வந்தார். இதைபார்ப்பதற்கு பாவமாக இருந்தது.
பல படங்களில்
இந்நிலையில்,யாஷியா ஆனந்த் Filmibeatக்கு பேட்டிஅளித்தார் அதில், ரொம்ப நாள் கழித்து ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி கூறினார். நடிக்க வேண்டிய படங்கள் நிறைய இருப்பதாகவும் அதில் இனி கவனம் செலுத்துவேன் என்றும் யாஷிகா கூறினார். கடமையைசெய் , பாம்பாட்டம், சுல்புர் , பேஸ்டீ போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











