Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நீ இன்னும் சாகலியா என கேட்ட ரசிகர்... கலங்க வைத்த யாஷிகாவின் பதில்
சென்னை : பிரபல மாடலும், நடிகையுமான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் என்ற படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகையானார். தொடர்ந்து நோட்டா, கழுகு, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட பல படங்களில் கிளாமராக உடையணிந்து, சிறிய ரோல்களில் நடித்தார்.
Recommended Video
ஆபாச படங்களை வைத்து மிரட்டும் ஆண்களுக்கு சவுக்கடி... அப்ளாஸை அள்ளும் 'என் உடம்பு' குறும்படம்!
விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமான யாஷிகாவிற்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள கடமையை செய் படத்தில் அவருக்கு ஜோடியாக லீட் ரோலில் நடித்துள்ளார்.

கிளாமர் ஃபோட்டோஷுட்
பல படங்களில் ஒரே சமயத்தில் நடித்திருந்தாலும் சோஷியல் மீடியாவில் விதவிதமாக கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார் யாஷிகா. இவர் நடித்து வந்த பல படங்கள் இறுதிக்கட்ட பணியில் உள்ளன.

கார் விபத்தில் படுகாயம்
இந்நிலையில் இந்த ஆண்டு ஜுலை மாதம் மாமல்லபுரம் சாலையில் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, யாஷிகா சென்ற கார் சாலையின் சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய யாஷிகாவின் தோழி சம்பள இடத்திலேயே உயிரிழந்தார். மிக மோசமாக படுகாயம் அடைந்த யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

படுத்த படுக்கையான யாஷிகா
இடுப்பு, கால் பகுதியில் பலத்த காயமடைந்த யாஷிகாவிற்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் நடக்க முடியாமல், படுத்த படுக்கையானார். தன்னால் எழுந்து நடக்கவே 5 மாதங்கள் வரை ஆகும் என அவரே தனது உடல்நிலை குறித்து அப்டேட் வெளியிட்டார். தொடர்ந்து தான் சிகிச்சை பெறும் வீடியோக்கள், நடக்க பயிற்சி பெறும் வீடியோக்கள் என பலவற்றை வெளியிட்டார் யாஷிகா.

மீண்டு வந்த யாஷிகா
விபத்திற்கு பிறகு சமீபத்தில் தான் முதல் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் யாஷிகா கலந்து கொண்டார். கையில் வாக்கிங் ஸ்டிக்குடன், மஞ்சள் நிற லெஹங்காவில் யாஷிகா வெளியிட்ட ஃபோட்டோக்கள் செம வைரலாகின. அவர் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி என பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

ரசிகர்கள் கேட்ட அந்த கேள்வி
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ரசிகர் ஒருவர் யாஷிகாவிடம், நீ இன்னும் சாகலியா என கேட்டுள்ளார். அதற்கு யாஷிகா அளித்த பதில் பலரையும் கலங்க வைத்துள்ளது. தயவு செய்து கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் நான் சீக்கிரம் சாக வேண்டும் என யாஷிகா தெரிவித்துள்ளார். இருந்தாலும் அந்த ரசிகர், நிச்சயம் உங்களுக்காக நான் வேண்டிக் கொள்கிறேன் என்றும் கூறி உள்ளார்.

ஆறுதல் கூறும் நெட்டிசன்கள்
யாஷிகாவிடம் இது போல் அநாகரிகமான முறையில் கேட்ட ரசிகரை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். அதே சமயம் ஏராளமான ரசிகர்கள், நீங்க ஸ்டிராங்கான பெண் யாஷிகா. பல நல்ல விஷயங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது. எல்லோரின் கடந்த வாழ்க்கையிலும் ஒரு கசப்பான அனுபவம் இருக்கும். அதற்காக நீங்க கலங்க வேண்டாம் என ஆறுதலும், தைரியமும் கூறி உள்ளனர்.