Don't Miss!
- News
நடிகர் வடிவேலு செய்வாரே.. டிட்டோ.. தண்ணீரை பீய்ச்சியடித்த போலீஸ்.. ஷாம்பூ போட்டு குளித்த மாணவர்கள்
- Lifestyle
சைனீஸ் ரெசிபியான சீசுவான் பன்னீர் எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology
பட்ஜெட் விலையில் இந்தியாவுக்கு வந்த புதிய Nokia டேப்லெட்: ஆளுக்கு 2 பார்சல்.!
- Automobiles
லாங் டிரைவ் போறதுக்கு ராயல் என்ஃபீல்டுல செம பைக் வந்துடுச்சு! விலை இவ்வளவு கம்மியா?
- Sports
"வேணும் ஆனா வேணாம்".. நியூசி, உடனான முதல் ஒருநாள் போட்டி.. ரோகித்-க்கு தலைவலியை தந்த இளம் வீரர்கள்!
- Finance
ரஷ்யா-வின் மாஸ்டர் பிளான்.. கடுப்பான அமெரிக்க, ஐரோப்பா.. இனி தங்கம் தான் எல்லாம்..!
- Travel
சென்னைக்குள் இப்படி ஒரு அழகிய கோயிலா – மன நிம்மதியை வழங்கும் மத்ஸ்ய நாராயணன் கோயில்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
அடப்பாவி நிரூப்...இப்படி பண்ணிட்டியே...பிரேக் அப் பற்றி யாஷிகாவின் ஓப்பன் டாக்
சென்னை : பிரபல மாடலான யாஷிகா ஆனந்த், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகாவிற்கு ரசிகர்களும் சரி, சினிமா வாய்ப்புக்களும் சரி அதிகரிக்க துவங்கியது.
பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்து வந்த யாஷிகாவிற்கு இரண்டாவது நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கவர்ச்சி ரோல்களில் அதிகம் நடித்து வந்த யாஷிகாவிற்கு கடமையை செய் படத்தின் மூலம் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கடமையை செய் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கார் விபத்தில் யாஷிகா மிக மோசமாக காயமடைந்தார். இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழி உயிரிழந்தார்.
கோச்சடையான் படத்திற்காக கடன் பெற்ற விவகாரம்: லதா ரஜினிகாந்த் மீதான வழக்கில் 3 பிரிவுகள் ரத்து

ரிலீசானது கடமையை செய்
விபத்தில் ஏற்பட்ட காயத்தால் படுத்த படுக்கையான யாஷிகா, எழுந்து நடக்க பல மாதங்கள் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் மிக குறுகிய காலத்திலேயே தனது முயற்சியால் மீண்டு வந்தார் யாஷிகா. கமிட்டாகி இருந்த படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த கடமையை செய் படம் இன்று ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இனி யாஷிகாவிற்கு வாய்ப்புக்கள் குவியும்
கடமையை செய் படத்திற்கு பிறகு யாஷிகாவின் சினிமா வாய்ப்புக்கள் பிரகாசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை கவர்ச்சிக்கு ரோல்களில் மட்டும் நடித்த யாஷிகாவிற்கு இனி நடிப்பை வெளிப்படுத்தும் வகையிலான நல்ல ரோல்கள் அமையும் என பலரும் கூறி வருகிறார்.

வீடியோ வெளியிட்ட நிரூப்
இந்த சமயத்தில் கடமையை செய் படத்தின் ப்ரொமோஷனிற்காக யாஷிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், அவரின் முன்னாள் காதலரும் பிக்பாஸ் பிரபலமுமான நிரூப் நந்தகுமார் பேசிய வீடியோ போட்டு காட்டப்பட்டு, கேள்விகள் கேட்கப்பட்டது. பிக்பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப், பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டு ரன்னர் அப் வென்றார்.

யாஷிகா - நிரூப் பிரேக் அப்
நிரூப்பும் யாஷிகாவும் காதலித்து வந்ததாகவும், நிரூப்பிற்கு பிக்பாசில் கலந்து கொள்ளும் வாய்ப்பு யாஷிகா மூலமாக தான் கிடைத்ததாகவும் சொல்லப்பட்டது. பிறகு இருவருக்கும் பிரேக் அப் ஆகி விட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் பிரேக் அப் பற்றி ஓபனாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் நிரூப்.

அடப்பாவி நிரூப்...இப்படியா பண்ணுவ
அதில், இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினோம். காதலர்களாக இருந்தோம். ஃபிரண்ட்சாக இருந்தோம். நமது உறவு பற்றி சொல்லி ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் எப்போதும் போல் தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்திருந்தார் நிரூப். இதை கேட்ட யாஷிகா, நல்ல டயலாக் டெலிவரி. நான் சொன்ன டயலாக்கை அப்படியே அவனுடைய டயலாக் போல் பேசி உள்ளான் என்றார்.

பிரேக் அப்பிற்கு இது தான் காரணம்
மேலும், ஒரு பாய் ஃபிரண்ட் அல்லது கேர்ள் ஃபிரண்ட் இருப்பது லவ் கிடையாது. அதை லவ் என்றே சொல்ல முடியாது. முதுகில் குத்தினாலும் அவர்களுக்கு நல்லது செய்து விட்டு போக வேண்டும். பிரேக்கப்பிற்கு நிறைய காரணம் இருக்கு. அதில் முக்கியமான மனது காயப்பட்டு, உடைந்து போனது தான் என ஓப்பனாக தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.