அபினய் சொன்னா தப்பு...பாப்பா சொன்னா தப்பில்லை...நல்லா பண்றீங்க நிரூப்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறவுகள் வரும் ஃபீரிஸ் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவரும், நிரூப்பின் காதலியுமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

இரண்டு நாட்களுக்கு முன் தன்னை பார்க்க வந்த தந்தையிடம் நிரூப், யாஷிகா பற்றி விசாரித்த விஷயம் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று அவரே வந்தார். அழகான பொம்மை போல் வந்த யாஷிகாவிடம் காதல் மழை பொழிந்தார் நிரூப்.

நிரூப் – யாஷிகா காதல்

நிரூப் – யாஷிகா காதல்

யாஷிகாவை பாப்பா...பாப்பா என வார்த்தைக்கு வார்த்தை கூப்பிட்ட நிரூப், வெளியே வந்த பிறகு தான் அவரை பார்த்துக் கொள்வதாக சொன்னார். பிறகு ஐ லவ் யூ என சொல்லி கண்ணாடி வழியாகவே யாஷிகாவிற்கு முத்தம் கொடுத்தார். யாஷிகாவும் காதலை சொல்ல செம ரொமான்ஸ் காட்சி நடந்தது. இதை வைத்து மற்ற போட்டியாளர்கள் நிரூப்பை கிண்டல் செய்தனர்.

கட்டிப்பிடிக்க முடியலியே

கட்டிப்பிடிக்க முடியலியே

ஆனால் யாஷிகாவை பார்த்த சந்தோஷத்தில் இருந்த நிரூப், அவரை கட்டிப்பிடிக்க முடியவில்லையே என மற்ற ஹவுஸ்மேட்களிடம் சொல்லி, புலம்பிக் கொண்டிருந்தார். இத்தனை நாளாக இந்த பாப்பா எங்கே போயிருந்தது என தாமரை, பிரியங்கா உள்ளிட்டோர் கிண்டல் செய்தனர். பாப்பாவை பார்த்ததும் உற்சாகமாகிட்டான் என வருணும் கிண்டல் செய்தார்.

முடியை வெட்டு நிரூப்

முடியை வெட்டு நிரூப்

யாஷிகா புறப்பட்டு செல்லும் முன், வீட்டிற்குள் இருந்து கண்ணாடி கதவு வழியாக பார்த்துக் கொண்டிருந்த நிரூப்பிடம் முடியை வெட்டும் படி சொன்னார். திரை மூடிக் கொண்டிருந்த போதிலும் சைகையிலும் அதனை கூறினார். ஆனால் நிரூப், சிரித்தபடியே அவரை பார்த்துக் கொண்டிருந்தார்.

அபினயிடம் எகிறிய நிரூப்

அபினயிடம் எகிறிய நிரூப்

கண்ணாடி டாஸ்கின் போது, அபினய்யின் கண்ணாடியாக இருந்த நிரூப் இருக்கையில், அபினய் முடியை லேசாக வெட்டிக் கொண்டார். இதனால் நிரூப்பும் முடியை லேசாக வெட்டிக் கொண்டார். ஆனால் அதற்காக அபினய்யிடம் தாறுமாறாக கத்தி சண்டை போட்டார் நிரூப். தான் கேன்சர் நோயாளி ஒருவருக்கு நன்கொடையாக வழங்குவதற்காக இந்த முடியை வளர்த்து வருவதாகவும், அது தெரிந்தே வேண்டுமென்றே அபினய் தன்னை முடியை வெட்ட வைத்ததாகவும் கூறினார்.

ஏன் யாஷிகாவிற்கு தெரியாதா

ஏன் யாஷிகாவிற்கு தெரியாதா

இந்த விவகாரத்தை கமலிடமும் கொண்டு சென்று சீரியசாக பேசினார் நிரூப். தான் எதற்காக முடியை வெட்டாமல் வைத்துள்ளார் என்ற விஷயம் சக போட்டியாளரான அபினய்யிடம் சொல்லி உள்ள நிரூப், காதலியான யாஷிகாவிடம் சொல்லாமல் இருந்திருப்பாரா. ஏன் இந்த விஷயம் யாஷிகாவிற்கு தெரியாதா, தெரிந்திருந்தால் நிரூப்பிடம் அவர் முடியை வெட்ட சொல்லி இருப்பாரா என நெட்டிசன்கள் கேள்விகளால் நிரூப்பை விளாசி வருகிறார்கள்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 22nd December 2021 - Promo 3 | Yashika-வை பார்த்ததும் துள்ளி குதித்து ஓடி வந்த Niroop
யாஷிகா சொன்னா தப்பில்லையா

யாஷிகா சொன்னா தப்பில்லையா

முடியை, அதுவும் நிரூப்பை உணர்ச்சிவசப்பட்டு டாஸ்கில் இருந்து விலக வைப்பதற்காக அபினய் லேசாக வெட்டியதை மிகப் பெரிய விஷயமாக்கிய நிரூப், ஏன் யாஷிகாவிடம் சாதாரணமாக கூட நோ சொல்லவில்லை. யாஷிகா சொல்லும் போது தாமரையுடன் சிரித்து விளையாடியபடி இருந்தார். லேசாக கூட உணர்ச்சிவசப்பட்டு, கோபப்பட்டதை போல் தெரியவில்லையே, அப்படியானால் அபினய் செய்தால் தப்பு, யாஷிகா சொன்னால் தவறில்லை என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X