Yashoda Twitter Review: கலங்கிய சமந்தாவை ஆனந்த கண்ணீர் சிந்த வைத்த ரசிகர்கள்.. யசோதா எப்படி இருக்கு?

சென்னை: யசோதா படத்தின் ப்ரோமோஷனின் போது நடிகை சமந்தா சில நொடிகள் கண் கலங்கி அழுதது ஒட்டுமொத்த ரசிகர்களையும் துடி துடிக்க செய்து விட்டது.

மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா நடிப்பில் இன்று வெளியாகி உள்ள யசோதா படத்திற்கு டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை காரணமாக சற்றே கூட்டம் குறைந்தாலும், சமந்தாவிற்காக யசோதா படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். வாடகைத்தாய் கான்செப்ட்டை மையமாக கொண்டு உருவாகி உள்ள யசோதா படம் எப்படி இருக்கு என ரசிகர்கள் சொல்லும் விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..

சமந்தா கட் அவுட்

சமந்தா கட் அவுட்

ஹரி சங்கர் மற்றும் ஹரீஷ் நாராயணன் இணைந்து இயக்கிய யசோதா படத்தில் சமந்தா லீடு ரோலில் நடித்துள்ளார். வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. ஹைதராபாத், விஜயநகரம், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்தினி, காக்கிநாடா, நந்தியால் உள்ளிட்ட பல ஊர்களில் சமந்தாவின் பிரம்மாண்ட கட் அவுட்கள் தியேட்டரை அலங்கரித்துள்ளன.

மஸ்ட் வாட்ச்

மஸ்ட் வாட்ச்

வாடகைத்தாய் கான்செப்ட்டை கொண்டு இளம் பெண்களிடம் நடத்தப்படும் மோசடிகள் குறித்த கதையாக உருவாகி உள்ள யசோதா திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும், சமந்தாவின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. தியேட்டரில் வெளியே வந்த போது யசோதா என்கிற வார்த்தை மட்டுமே மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்த்து

ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்த்து

சமந்தாவுக்கு சினிமா துறையில் பல முன்னணி நடிகைகள் ஆறுதல் கூறவில்லை என ரசிகர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய டிரைவர் ஜமுனா படத்தின் ரிலீஸையே தள்ளி வைத்து, சமந்தாவின் யசோதா படம் வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார்.

ஆனந்த கண்ணீர்

ஆனந்த கண்ணீர்

ஓ பேபி, யூ டர்ன் படங்களை போல சமந்தா சோலோவாக நடித்து வெளியாகி உள்ள யசோதா திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறி உள்ளது என சமந்தா கண்ணீர் சிந்தும் போட்டோவை போட்டு ரசிகர் ஒருவர் பாராட்டிய நிலையில், அதே எமோஷன் தான் இங்கேயும் என ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார் சமந்தா.

4 ஸ்டார்

4 ஸ்டார்

சமந்தாவின் யசோதா திரைப்படம் எங்கேயும் போர் அடிக்காமல், ட்விஸ்ட் நிறைந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகவும் சோஷியல் மெசேஜ் கொண்ட படமாகவும் அமைந்துள்ளது. இயக்கம், நடிகர்களின் நடிப்பு, பின்னணி இசை என எல்லாமே பக்காவாக அமைந்த நிலையில், இந்த படத்துக்கு 4 ஸ்டார் ரேட்டிங் தருகிறேன் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார். அதற்கு நன்றி என சமந்தா போட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X