Don't Miss!
- News
பேராபத்து.. கடலூரும் அரியலூரும் அழிந்தே விடுமாம்! 2 லட்சம் குடும்பத்தின் கதி - அப்படி என்ன திட்டம்?
- Lifestyle
உங்க எடையை சீக்கிரம் குறைக்க உதவும் இந்த உணவுகளை நீங்க பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடலாம்!
- Finance
Gold: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இப்ப வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Year Ender 2022: இந்த ஆண்டில் சூப்பர் ஹிட் படங்களின் 2ம் பாகம்... ரசிகர்கள் எதிர்பார்க்கும் மூவிஸ்
சென்னை: 2022ம் ஆண்டில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் உட்பட பல படங்கள் தமிழில் வெளியாகின.
விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, கமலின் விக்ரம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இந்தாண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற சில திரைப்படங்களின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகும் என சொல்லப்பட்டது.
அதன்படி ரசிகர்களிடம் அதிகம் ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களின் இரண்டாம் பாகம் எதுவென்று இப்போது பார்க்கலாம்.
வெற்றி தோல்வி முக்கியம் இல்லை... வசூல் தான் மேட்டர்: மீண்டும் விஜய் தான் நம்பர் 1 மோடில் தில் ராஜூ

விக்ரம் செகண்ட் பார்ட்
பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகே ஹிட் படங்களின் இரண்டாம் பாகம் என்ற ட்ரெண்ட் செட்டர் உருவானது. அந்த வரிசையில் இந்தாண்டு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா என மல்டி ஸ்டார் திரைப்படமாக உருவானது விக்ரம். இந்தப் படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான லிடுடன் முடித்திருந்தார் லோகேஷ். அதேபோல், விக்ரம் பாடத்தின் சீக்வெல் உருவாகும் என்றும் கூறியிருந்தார். லோகேஷ் அடுத்து விஜய் நடிப்பில் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். அதனால் அடுத்தாண்டே இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லமுடியாது. ஆனால், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களின் வரிசையில் வ்க்ரம் தான் முதலிடத்தில் உள்ளது.

பொன்னியின் செல்வன் 2
இந்த வரிசையில் இரண்டாவதாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் லைகா பிரம்மாண்டமாக தயாரித்த பொன்னியின் செல்வன், செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸானது. ஏஆர் ரஹ்மான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தையும் மணிரத்னம் ஏற்கனவே இயக்கிவிட்டார். அதனால் ரிலீஸ் தேதியை மட்டும் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, ஏப்ரல் 2ம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியாகும் என்ற நல்ல செய்தி தற்போது கிடைத்துவிட்டது.

வெந்து தணிந்தது காடு
சிம்பு - கெளதம் மேனன் - ஏஆர் ரஹ்மான் மேஜிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்தாண்டு செப்டம்பர் 15ம் தேதி ரிலீஸான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்தது. மேலும், க்ளைமேக்ஸில் செகண்ட் பார்ட்டின் லீட் வைத்து முடித்திருந்தார் கெள்தம் மேனன். அதேபோல் விரைவில் இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் படக்குழு தெரிவித்தது. ஆனால், இன்னும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் பட்டியலில் வெந்து தணிந்தது காடு 2 மூன்றாம் இடத்தில் உள்ளது.

கார்த்தியின் சர்தார் 2
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த சர்தார், தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. ஆக்ஷன் ஜானரில் பக்கா கமர்சியல் திரைப்படமாக ரிலீஸான சர்தார், பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை கடந்தது. படத்தின் சக்சஸ் மீட்டில் சர்தார் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. சர்தார் 2 அடுத்தாண்டு வெளியாகுமா என உறுதியாக தெரியவில்லை என்றாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 4 ம் இடத்தில் உள்ளது இந்தப் படம்.

ரசிகர்களின் லிஸ்ட்
இந்தப் பட்டியலில் இதுவரை படக்குழுவினரால் அறிவிக்கப்படாத படங்களின் இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதன்படி தனுஷின் திருச்சிற்றம்பலம், விஜய் சேதுபதி, நயன், சமந்தா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என ரசிகர்கள் கூறியுள்ளனர். அதேபோல் அருள்நிதி நடித்த டைரி, விஷ்ணு விஷால் நடிப்பில் வெற்றிப் பெற்ற கட்டா குஸ்தி படங்களின் இரண்டாம் பாகம் உருவானால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.