Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டி? தேர்தல் பணிக்காக 14 பேர் கொண்ட குழு.. அண்ணாமலை அறிவிப்பு!
- Sports
திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.. டாம் லேதமுக்கு பாடம் புகட்டிய இஷான் கிஷான்.. ஷாக் ஆன அம்பயர்கள்!
- Finance
தங்கம் விலை அதிகரிப்பால் இப்படி ஒரு நல்ல விஷயமும் இருக்கா.?
- Lifestyle
இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருந்தா உடனே மாத்துங்க... இல்லன்னா அது உங்களை ஏழையாக்கிடும்...
- Automobiles
இந்த பைக்குகளுக்கு பெட்ரோல் கொஞ்சோண்டு போதும்... ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த ஃப்ளெக்ஸி ஃப்யூவல் டூ-வீலர்கள்!
- Technology
ரோபோட்டுக்கு உணர்ச்சி இல்லைனு யார் சனா சொன்னது? 'எல்லாமே' இருக்குனு நிரூபிச்சுட்டாங்க.!
- Travel
நியூயார்க் டைம்ஸின் 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய மாநிலம்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
2022ம் ஆண்டில் திரையுலகம் சந்தித்த மிகப் பெரும் இழப்புகள்... சோகத்தில் ரசிகர்கள்!
சென்னை: 2022ம் ஆண்டு திரையுலகிலும் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன.
பிரபலங்களின் திருமணம், பல புதிய திருப்பங்கள் என பல சுவையான நிகழ்வுகளை தந்துள்ளது.
அதேபோல், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய பல இழப்புகளும் திரையுலகில் நடந்துள்ளன.
அதில் சில முக்கியமான பிரபலங்களின் உயிரிழப்புகளை இப்போது பார்க்கலாம்.
தன்யாவை 2வது திருமணம் செய்தது உண்மை..அவதூறாக பேசிய நடிகை மீது வழக்கு தொடுத்த இயக்குநர் பாலாஜி மோகன்!

திரையுலகை பிரிந்த பிரபலங்கள்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி திரையுலகிலும் சில முக்கியமான பிரபலங்கள் இந்தாண்டு காலமாகியுள்ளனர். ரசிகர்களுக்கு சோகத்தையும் திரையுலகுக்கு பெரும் இழப்பாகவும் அவர்களின் மரணங்கள் அமைந்தன. அவர்களில் பாடலாசிரியர் காமகோடியான். மிக முக்கியமானவர். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, யுவன் என பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடல் எழுதியுள்ள காமகோடியான், வயது மூப்பின் காரணமாக ஜனவரி 5ம் தேதி இவர் உயிரிழந்தார். அதேபோல் கமலுடன் மைக்கேல் மதன் காமராஜன் படத்தில் பீம் பாயாக நடித்திருந்த பிரவீன்குமார் சோப்தி, பிப்ரவரி 7ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

மலையாள திரையுலகில் சோகம்
மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்த கேபிஏசி லலிதா பிப்ரவரி 22ம் தேதி காலமானார். மலையாளம் மட்டுமின்றி காதலுக்கு மரியாதை, கிரீடம் போன்ற தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷங்க திரைப்படம் உருவாகியிருந்தது. தமிழில் தேவர் மகன் படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் பரதனின் மனைவி தான் இந்த கேபிஏசி லலிதா என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 8ம் தேதி இயக்குநர் பாபா விக்ரம் காலமானார். கண்ணம்மா, என் இதயராணி, பொம்மை நாய்கள், அதிர்ஷ்டம் போன்ற படங்களை இயக்கியுள்ள இவ்ர், வயது மூப்பு காரணமாக தனது 80வது வயதில் உயிரிழந்தார்.

சலீம் கெளஸ் மறைவு
90களின் காலக்கட்டத்தில் தமிழில் வெளியான சின்ன கவுண்டர், வெற்றிவிழா உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளவர் சலீம் கெளஸ், அவர் ஏப்ரல் 28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தா, அவருக்கு வயது 70. சலீம் கெளஸ் விஜய்யின் வேட்டைக்காரன் படத்திலும் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வடிவேலுவுடன் ஏராளமான காமெடிக் காட்சிகளில் நடித்துள்ள ரங்கம்மாள் பாட்டி, தனது 83வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

நினைத்து நினைத்துப் பார்த்தேன் கேகே
மே 22ம் தேதி த்யாரிப்பாளர் ஏக்நாத், பாடகி சங்கீதா சஜித் ஆகியோர் உயிரிழந்தனர். மிஸ்டர் ரோமியோ படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் இடம்பெற்ற 'தண்ணீரை காதலிக்கும்' பாடல் மூலம் பிரபலமானவர் சங்கீதா சஜித். சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சங்கீதா சஜித் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் 1ம் தேதி பாடகர் கேகே உயிரிழந்தது இசை ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. நினைத்து நினைத்துப் பார்த்தேன், உயிரின் உயிரே என ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள கேகே, இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

பூ ராமு, பிரதாப் போத்தன்
அதேபோல் தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமான ராமு, ஜூன் 27ம் தேதி மாரடைப்பால் காலமானார். நாடக கலைஞரான பூ ராமு, பரியேறும் பெருமாள், நெடுநல்வாடை உட்பட பல படங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளார். ம்லையாளத்தில் மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்தார். பாலா இயக்கிய அவன் - இவன் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ராமராஜ், ஜூலை 11ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதேபோல் தமிழ், மலையாளம் திரையுலகில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்த பிராதப் போத்தன், தனது 70வது வயதில் காலமானார்.

பம்பா பாக்யா மறைவு
செப்டம்பர் 2ம் தேதி பிரபல பின்னணிப் பாடகர் பம்பா பாக்யா காலமானார். புல்லினங்கால், சிம்டாங்காரன் போன்ற ஹிட் பாடல்களைப் பாடியிருந்த அவர், கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் வரும் பொன்னி நதி பாடலின் முதல் அடிகளை பாடியிருந்தார். செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் ரிலீஸாகவிருந்த நிலையில், அவர் அதேமாதம் 2ம் தேதியே காலமானது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. செப்டம்பர் 18ம் தேதி நடிகை தீபா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வாய்தா, துப்பறிவாளன் படங்களில் நடித்திருந்த தீபா என்ற பவுலின், காதல் தோல்வி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் சோகம்
மேலும், செப்டம்பர் 26ம் தேதி அனிருத்தின் தாத்தாவும் இயக்குநருமான எஸ்.வி.ரமணன் காலமானார். நவம்பர் 15ம் தேதி தெலுங்கு சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா 80வது வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். டிசம்பர் 1ம் தேதி அன்பே சிவம், பகவதி, உன்னை நினைத்து போன்ற படங்களை தயாரித்துள்ள லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளிதரன் காலமானார். டிசம்பர் 3ம் தேதி வெண்ணிலா கபடி குழு புகழ் நடிகர் ஹரி வைரவனும், 24ம் தேதி மாயி சுந்தரும் அடுத்தடுத்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.