For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Year ender 2022 :செருப்பு பிஞ்சிடும்.. பயில்வான் உடன் நேரடியாக மோதிய ரேகா நாயர்.. ஒரு பிளாஷ் பேக்!

  |

  சென்னை : 2022ம் ஆண்டு விடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்த ஆண்டில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்கள், சர்ச்சைகள் பலவற்றை நாம் திரும்பிப்பார்த்து வருகிறோம்.

  அந்த வகையில் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதனை, இரவின் நிழல் பட நடிகை பீச்சில்வைத்து சும்மா சும்மா வெளுவெளுவென வெளுத்து இருந்தார்.

  இந்த ஆண்டில் இந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியது. அதுபற்றிய செய்தியைப் பார்க்கலாம்.

   ட்ரைலர் ஹிட்டு... படம் ஃபிளாப்: 2022ம் ஆண்டில் ரசிகர்களை ஏமாற்றிய டாப் ஹீரோஸ் மூவிஸ் ட்ரைலர் ஹிட்டு... படம் ஃபிளாப்: 2022ம் ஆண்டில் ரசிகர்களை ஏமாற்றிய டாப் ஹீரோஸ் மூவிஸ்

  இரவின் நிழல்

  இரவின் நிழல்

  இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ஒத்த செருப்பு படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு இரவின் நிழல் படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது.

  பாராட்டுகளை பெற்ற படம்

  பாராட்டுகளை பெற்ற படம்

  இரவின் நிழல் படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

  பஞ்சாயத்து ஓயவில்லை

  பஞ்சாயத்து ஓயவில்லை

  இரவின் நிழல் முதல் நான் லீனியர் பெருமையை பெற்றிருக்கும் நிலையில், ப்ளு சட்டை மாறன், முதல் நான் லீனியர் படம் இது இல்லை என பிரச்சனையை ட்விட்டரில் கிளப்பிவிட, இருவரும் மாறி மாறி ட்விட்டரில் மல்லுக்கட்டிக் கொண்டனர். இப்போது வரை பார்த்திபனுக்கும் ப்ளுசட்டை மாறனுக்கும் இடையிலான பஞ்சாயத்து ஓய்ந்த பாடு இல்லை.

  அரைநிர்வாணமாக நடித்தேன்

  அரைநிர்வாணமாக நடித்தேன்

  இரவின் நிழல் படம் இந்த பிரச்சனையை மட்டும் கிளப்பவில்லை அரைநிர்வாணம், நிர்வாணகாட்சி என பல சர்ச்சைக்குரிய விவகாரத்தையும் கிளப்பியது. இந்த படத்தில், நடிகை ரேகா நாயர் அரை நிர்வாணமாக அதாவது ஒரு பக்க மார்பகம் தெரியும்படி நடித்திருந்தார். இதுபற்றி பேட்டி ஒன்றில் பேசிய ரேகா நாயர், கதையின் தேவைக்காக அப்படி அரைநிர்வாணமாக நடித்திருந்தேன். வேண்டும் என்றால் இரண்டு மார்பகங்களை காட்ட ரெடி என பார்த்திபனிடம் கூறியதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

  ஆபாசமாக நடித்தார்

  ஆபாசமாக நடித்தார்

  இந்த பேட்டியைப் பார்த்த பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில், ரேகா நாயர் குறித்து பேசி இருந்தார். அதில், இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் மார்பகத்தை காட்டி நடித்துள்ளார் என்றும், 23 டேக்குகள் எடுக்கப்பட்ட நிலையில் 24வது டேக்கில் தான் இந்த காட்சி முடிந்துள்ளது. அப்போது பார்த்திபனை ரேகா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாக கூறியிருந்தார்.மேலும், தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் நெருங்கிய தோழிதான் இந்த ரேகா நாயர். சித்ரா போதை பொருள் பயன்படுத்தியதாக கூறியதே இவர் தான் என பேசியிருந்தார்.

  செருப்பு பிஞ்சிடும்...

  செருப்பு பிஞ்சிடும்...

  பயில்வானின் இந்த வீடியோவைப் பார்த்த ரேகா நாயர், பயில்வான் ரங்கநாதன் தினமும் வாக்கிங் போகும் திருவான்மியூர் பீச்சில், அவரை மடக்கி மடக்கி கேள்வி கேட்டார். நான் எப்படி வேண்டும் என்றாலும் நடிப்பேன். அது என் தனிப்பட்ட உரிமை என் விருப்பம். அதைக் கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கு? நான் என்ன பொண்ணா... இல்ல உன் பொண்டாட்டியா? நீ யார் என்ன கேட்க? பார்க்க புடிச்சா பாரு இல்லைனா போ... என்ன ஏதுனு தெரியாம இனிமே நீ பேசுனா செருப்பு பிஞ்சிடும் என பயில்வானை அடிக்க பாய்ந்தார். இருவரும் பொது இடத்தில் அடித்துக்கொண்ட விவகாரம் இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது.

  English summary
  year ender 2022 : Rekha Nair and Bayilvan Ranganathan fight for Iravin Nizhal nude scene
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X