twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2014 பிளாஷ்பேக்: பெண்களை மையமாக வைத்து கொடி நாட்டிய பாலிவுட்!

    |

    சென்னை: ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த இந்திப் பட உலகில் கடந்து போக இருக்கும் 2014 ஆம் ஆண்டில் பெண்களை மையமாக வைத்து பல்வேறு படங்கள் வெளியாகி சக்கை போடு போட்டன.

    2014 ஆம் ஆண்டில் பாலிவுட் சினிமாவைப் பொறுத்த வரையில் கதாநாயகிகளின் வசந்த காலம் என்றே சொல்லலாம்.

    அந்த அளவிற்கு பெண்களை சூப்பர் ஹீரோயின்களாக பிரதிபலிக்கும் வகையிலான படங்கள் வெளிவந்து கல்லாவும் கட்டியுள்ளன.

    குயின்: (கங்கனா ரணாவத்):

    குயின்: (கங்கனா ரணாவத்):

    2014 ஆம் ஆண்டின் பெண்களை மையமாகக் கொண்டு வந்த படங்களில் சிறந்த ஒன்று ராணி என்ற பொருள் கொண்ட "குயின்" திரைப்படம்.

    மகளிர் தின ஸ்பெஷல்:

    மகளிர் தின ஸ்பெஷல்:

    இந்தியாவின் மிகவும் பெருமை வாய்ந்த, முக்கிய தினமான "மகளிர் தினம்" அன்று வெளியாகியது இத்திரைப்படம். முழுவதும் ஒரு இயல்பான ஆசைகள் உடைய பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்ட இப்படத்தின் கதை..

    சுயநலவாதி கணவன்:

    சுயநலவாதி கணவன்:

    தன்னுடைய சுயலாபங்களுக்காகவும், வரதட்சணைக்காகவும் மட்டுமே ராணி என்கின்ற பெண்ணை மணந்து கொள்கிறான் ஒருவன். தன்னுடைய தேவைகள் பூர்த்தியானதும் அவளை விட்டுவிட்டு சென்று விடுகின்றார்.

    ஒரு பெண்ணின் தேன் நிலவு:

    ஒரு பெண்ணின் தேன் நிலவு:

    இந்நிலையில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அவர்களின் தேன்நிலவுப் பயணமும் ரத்தாகிவிடும் என்ற நிலையில், என்னுடைய மன ஆறுதலுக்காக நான் மட்டும் தனியாக செல்கிறேன் என்று ராணி தேன்நிலவுக்கு தனியாக செல்வதுதான் கதை.

    வெற்றி பெற்ற படம்:

    வெற்றி பெற்ற படம்:

    இப்படத்தின் இயக்குனர் விகாஸ் பால், தன்னை உணர்ந்த இரு பெண்ணின் பயணத்தினை மிகவும் அழகாக விவரித்து இருப்பார். கொஞ்சம் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையிலும் கமர்ஷியலான வெற்றியைப் பெற்றது இப்படம்.

    மர்தானி:

    மர்தானி:

    பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பலமான அஸ்திவாரத்தினை இப்படம் மூலமாக ரசிகர்களுக்குத் திருப்பிக் கொடுத்தார் ராணி முகர்ஜி. இப்படத்தில் கிரைம் பிராஞ்ச் பிரிவின் சீனியர் இன்ஸ்பெக்டராக நடித்திருப்பார் ராணி முகர்ஜி.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:

    பெண்களுக்கு எதிரான அநியாயங்களை மையமாக வைத்து இப்படம் வெளிவந்தது. ஒரு பெண் காவல்துறை அதிகாரியாக சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார் ராணி முகர்ஜி.

    ஹைவே:

    ஹைவே:

    ஹைவே இதுவும் பயணத்தினை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படம்தான். அலியா பட் "வீரா" என்ற பெண்ணின் கதாப்பாத்திரத்தினை சிறப்பாக செய்திருப்பார்.

    உள்ளே, வெளியே:

    உள்ளே, வெளியே:

    வீட்டை விட்டே வெளியேறாத ஒரு பெண், வெளிப்புற சூழ்நிலைகளை அறிந்து கொள்வதற்காக செல்லும்போது, மகாபீர் சிங் என்ற லாரி டிரைவரால் கடத்தப்படுகின்றார்.

    இழையோடும் காதல்:

    இழையோடும் காதல்:

    இந்நிலையில் தங்களுடைய சிறுவயது வாழ்க்கையின் நினைவுகளால் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கின்றனர். ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பெரிதும் ரசிக்கப்பட்ட படம்.

    மேரி கோம்:

    மேரி கோம்:

    இந்தியாவின் இரும்புப் பெண்ணான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம்தான் மேரி கோம்.

    கிராமம் டூ பதக்கம்:

    கிராமம் டூ பதக்கம்:

    ஒரு சிறிய கிராமத்தின் சாதாரண பெண்ணான மேரி கோமிற்கும், ஐந்து முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்திற்கும் இடையேயான பயணத்தை சொல்லிய திரைப்படம்.

    நல்ல வசூல்:

    நல்ல வசூல்:

    பிரியங்கா சோப்ரா, மேரி கோமாகவே வாழ்ந்திருந்தார் இத்திரைப்படத்தில். பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றுத் தந்தது இத்திரைப்படம்.

    பாபி ஜாசூஸ்:

    பாபி ஜாசூஸ்:

    2014 ஆண்டு வந்த வித்யா பாலனின் படங்களிலேயே கலகலப்பான திரைப்படம் "பாபி ஜாசூஸ்". துப்பறியும் படங்களின் வரிசையில் இணைந்த இப்படம், ரசிகர்களை அதிக அளவில் இழுக்காவிட்டாலும், விமர்சகர்களால் அதிக அளவில் பாராட்டப்பட்ட திரைப்படம். 12 வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் அசத்தி இருந்தார் வித்யா பாலன்.

    டெத் இஷ்கிகயா:

    டெத் இஷ்கிகயா:

    இஷ்கிகயா திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த திரைப்படம்தான் இது. இஷ்கிகயா திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களான காலூஜூன் மற்றும் பாபோன் ஆகிய இரண்டு பெண்கள்தான் இப்படத்திலும் மையமானவர்கள்.

    இரண்டு பெண்கள்:

    இரண்டு பெண்கள்:

    மாதுரி தீக்‌ஷித் மற்றும் ஹூமா குரேசி அக்கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நல்ல திரைப்படமானபோதிலும், பாக்ஸ் ஆபிசில் சுமாரான வசூலினைத்தான் பெற்றுத்தந்தது.

    குலாப் கேங்:

    குலாப் கேங்:

    பாலிவுட்டின் இரண்டு எதிரெதிர் துருவங்களை ஒரே படத்தின் இணைத்த பெருமையை தட்டிக் கொண்டு சென்றது ரோஜாக்கூட்டம் என்ற பொருள் கொண்ட இப்படம்.

    ரோஜாக்கூட்டம்:

    ரோஜாக்கூட்டம்:

    மாதுரி தீக்‌ஷித்தும், ஜூஹி சாவ்லாவும் தான் அந்த துருவங்கள். தங்களுடைய சிறந்த நடிப்பால் பலபேரை கட்டி இழுத்திருந்தனர் இருவரும்.

    ரிவால்வர் ராணி: குயின் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கங்கணா ரணாவத் நடித்த திரைப்படம் ரிவால்வர் ராணி.

    அரசியல் பெண்ணின் காதல்:

    அரசியல் பெண்ணின் காதல்:

    அல்கா சிக் என்ற பெண் அரசியல்வாதியினையும், திரைப்பட கதாநாயகன் ஒருவரின் மேலான அவருடைய காதலையும் மையமாகக் கொண்ட திரைப்படம் இது. தன்னுடைய நடிப்பில் கங்கனா ஜொலித்திருந்தாலும் அவ்வளவாக வசூலினைக் குவிக்கவில்லை இத்திரைப்படம்.

    மொத்தத்தில் இந்தி திரைப்பட உலகில் 2014 ஆம் ஆண்டு பெண்களுக்கான பொற்காலமாகவே அமைந்திருந்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்கள் வரிசை கட்டி நின்றிருந்தன.

    English summary
    2014 was like a breath of fresh air for otherwise male-dominated Hindi film industry. There were many films this year revolving around female protagonists. Take a look.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X