»   »  முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி கவுதம்-தனுஷ் வாய்ப்பைக் கைப்பற்றிய மேகா ஆகாஷ்

முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி கவுதம்-தனுஷ் வாய்ப்பைக் கைப்பற்றிய மேகா ஆகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ்-கவுதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு இன்று காலை முதல் தொடங்கியிருக்கிறது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒரு பக்க கதை படத்தின் நாயகி மேகா ஆகாஷை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சூர்யா, சிம்பு போன்ற நடிகர்களின் மார்க்கெட்டை உயர்த்தியவர் என்பதால், கவுதம் மேனனின் இப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிகபடியான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

என்னை நோக்கி பாயும் தோட்டா

என்னை நோக்கி பாயும் தோட்டா

இப்படத்தை அஜீத் நடிப்பில் உருவாக்கத் தான் கவுதம் மேனன் திட்டமிட்டிருந்தார். அஜீத் இக்கதையை வேண்டாம் என்று மறுக்க, வேறு ஒரு கதையில் (என்னை அறிந்தால்) கவுதம் மேனன் அவரை நடிக்க வைத்தார்.

தனுஷ்- கவுதம் மேனன்

தனுஷ்- கவுதம் மேனன்

ஆனால் தனுஷிற்கு இந்தக் கதை பிடித்துப்போய் விட, முதன்முறையாக கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது உறுதியானது. என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு, இன்று காலை சென்னை கிழக்குக்கடற்கரைச்சாலையிலுள்ள ஒரு கல்லூரியில் தொடங்கியிருக்கிறது.

புகைப்படம்

படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தலையில் தொப்பியுடன் கவுதம் மேனனும், கல்லூரிப் பையன் தோற்றத்தில் தனுஷும் காட்சியளிக்கின்றனர். தலைப்புக்கு ஏற்றவாறு இப்படம் ஒரு போலீஸ் கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, மாறாக மீசையை எடுத்து விட்டு தனுஷ் நடித்து வருகிறார்.

ஒரு பக்கக் கதை

ஒரு பக்கக் கதை

அச்சம் என்பது மடமையடா படத்தில் மஞ்சிமா மோகனை அறிமுகப்படுத்தியது போல போல, இப்படத்தில் மேகா ஆகாஷ் என்னும் நாயகியை கவுதம் மேனன் அறிமுகப்படுத்துகிறார். நடிகர் ஜெயமராமின் மகன் காளிதாஸ் ஜெயராமுடன் ஒரு பக்கக் கதை என்ற படத்தில் மட்டுமே மேகா நாயகியாக நடித்திருக்கிறார். இதனால் மேகா ஆகாஷுக்கு கவுதம் மேனன்-தனுஷ் பட வாய்ப்பு கிடைத்திருப்பதை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

தோட்டாவாக தனுஷ் பாய்வாரா? பார்க்கலாம்.

    English summary
    Yenai Nokki Paayum Thotaa Shooting Starts Today. Dhanush Tweeted "Another film. Another role. Another new journey. #YenaiNokkiPaayumThotaa shoot starts 4m today with all ur blessings".

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil