»   »  கன்னடத்தில் மாத்தாடப் போகும் அஜீத்: தல ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

கன்னடத்தில் மாத்தாடப் போகும் அஜீத்: தல ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் நடித்த என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு சத்யதேவ் என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் சத்யதேவ் ஐபிஎஸ் அதிகாரியாக அசத்தலாக நடித்த படம் என்னை அறிந்தால். 2015ம் ஆண்டு வெளியான அந்த படம் ஹிட்டானது.

Yennai Arindhal gets dubbed in Kannada as Sathyadev

அந்த படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடித்த அருண் விஜய்க்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

கன்னடத்தில் சத்யதேவ் என்ற பெயரில் படம் வெளியாக உள்ளது. அஜீத் படம் கன்னடத்தில் வெளியாக உள்ள செய்தி அறிந்து கர்நாடகாவில் வசிக்கும் தல ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

சத்யதேவை கன்னட மக்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Ajith's Yennai Arindhal has got dubbed in Kannada as Sathyadev. Sathyadev is ready to impress Kannada speaking fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil