»   »  'என்னை அறிந்தால்' ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்? தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் விளக்கம்

'என்னை அறிந்தால்' ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்? தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' அஜித் நடித்துள்ள, 'என்னை அறிந்தால்' திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வராமல் தள்ளிப்போனதன் பின்னணியில் பின்னணி இசை சேர்ப்பு, மிக்சிங் போன்ற பணிகள் பாக்கியுள்ளதுதான் காரணம் என்றும் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் விளக்கம் அளித்துள்ளார். பட வெளியீடு தள்ளிப்போனது குறித்து, பல்வேறு யூகங்கள் நிலவிய நிலையில் ரத்னம் வெளியிட்டுள்ள அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

சபாஷ் சரியான போட்டி..

சபாஷ் சரியான போட்டி..

'என்னை அறிந்தால்' திரைப்படம், பொங்கலுக்கு வெளியாகும். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'ஐ' திரைப்படத்திற்கும், 'என்னை அறிந்தாலுக்கும்' இடையே கடும் போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


'ஐ' படத்திற்கு அரைகூவல்

'ஐ' படத்திற்கு அரைகூவல்

'ஒருபோதும் வந்து மோதமாட்டாய் என்னை அறிந்தால். மோதிப்பார்க்க ஆசைப்பட்டால் 'ஐ'யோ தொலைந்தாய்..' என்ற பாடல் வரி, 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே இது 'ஐ' படத்திற்கான எச்சரிக்கை பாடல் என்றே பல அஜித் ரசிகர்களும் நினைத்துக் கொண்டனர்.


'தல' பொங்கல்..

'தல' பொங்கல்..

அதேபோல, 'என்னை அறிந்தால்' படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்றே பத்திரிகையில் விளம்பரம் தரப்பட்டும் வந்தது. இதனால், அஜித் ரசிகர்கள், தங்களுக்கு இது 'தல' பொங்கலாக அமையப்போகிறது என்று மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து வந்தனர். ஆனால், திடீரென கடந்த வாரம் ஏ.எம்.ரத்னம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, 'என்னை அறிந்தால்', பொங்கலுக்கு ரிலீசாகாது, ஜனவரி 29ம்தேதி திரைக்கு வர உள்ளது என்று ரத்னம் தெரிவித்தார்.


பல யூகங்கள்

பல யூகங்கள்

'ஐ' திரைப்படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டதுடன், வெற்றி இயக்குநர் ஷங்கரின் கைவண்ணத்தில் உருவானது என்பதால், தனது படத்தை பொங்கலுக்கு வெளியிட ஏ.எம்.ரத்னம் பயந்துவிட்டார் என்றும், 'ஐ' படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்கிய தியேட்டர் அதிபர்கள், 'என்னை அறிந்தாலுக்கு' குறைவான தியேட்டரை ஒதுக்கியதால்தான் பட வெளியீடு தள்ளிப்போய்விட்டது என்றும் பல்வேறு செவி வழி செய்திகள் உலா வந்தன. இதனால் அஜித் ரசிகர்கள், தயாரிப்பாளர் தரப்பு மீது கடும் கோபத்தில் இருந்தனர்.


வேலை பாக்கி இருக்குப்பா..

வேலை பாக்கி இருக்குப்பா..

இந்நிலையில் ஏ.எம்.ரத்னம் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: 'என்னை அறிந்தால்' படத்தின் பின்னணி இசை சேர்ப்பு, மிக்சிங் போன்ற பணிகள் நிறைவடையவில்லை. பட வேலைகளை அவசரம் அவசரமாக முடித்து வெளியிட விரும்பவில்லை. எல்லா வேலைகளையும் நிதானமாக முடித்து, படத்தை 2 வாரங்கள் தள்ளி திரைக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, படத்தின் வெளியீடு 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ரத்னம் தெரிவித்துள்ளார்.


English summary
Yennai Arindhal release date postponed due to post production pending works, says film producer A.M.Ratnam.
Please Wait while comments are loading...