»   »  ஜனவரி 14-ம் தேதி என்னை அறிந்தால் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜனவரி 14-ம் தேதி என்னை அறிந்தால் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத்தின் என்னை அறிந்தால் படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்னை அறிந்தால்.

Yennai Arinthaal release date confirmed

இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என கடந்த மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் ஐ உள்பட மேலும் 3 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், என்னை அறிந்தால் வருமா என்ற கேள்வி இருந்தது.

இப்போது என்னை அறிந்தால் படம் திட்டமிட்டபடி பொங்கல் ஸ்பெஷலாக வரப்போவது உறுதியாகிவிட்டது.

வரும் ஜனவரி 14-ம் தேதி தை முதல் நாளில் என்னை அறிந்தால் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அட்மஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. வெளிநாடுகளில் ஒரு நாள் முன்பாகவே என்னை அறிந்தால் வெளியாகவிருக்கிறது.

English summary
Ajith's Yennai Arinthaal movie release date has confirmed and the movie will be hitting screens on January 14 worldwide.
Please Wait while comments are loading...