»   »  என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…!

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில நேரங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பஞ்ச் டயலாக் ரசிகர்கள் மத்தியில் பட்டையை கிளப்பும். அஜீத் அல்லது விஜய்யின் பஞ்ச் பட்டி தொட்டி எங்கும் சில சமயங்களில் பரபரப்பை கிளப்பும்.

ஆனால் கடந்த ஆண்டு பாரபட்சம் பாராமல் பட்டி தொட்டி எங்கும் பரபரப்பை கிளப்பிய வசனம் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...' என்பதுதான்.

இது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…

இந்த ஒரு வார்த்தையை வைத்து விஜய் டிவியில் சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் பட்டையை கிளப்பியிருப்பார்கள். இது யுடுயூப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாட்டாகவே பாடிய இமான்…

பாட்டாகவே பாடிய இமான்…

இந்நிலையில் ரஜினி முருகன் படத்திற்காக இசையமைப்பாளர் டி.இமான் போட்டுள்ள ஒரு டியூன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு டியூனை போட்ட டி.இமான், இந்த பாடலின் முதல் வரியில் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என்ற வார்த்தைகள் வருமாறு அமைத்துள்ளாராம்.

இன்ப அதிர்ச்சியில்

இன்ப அதிர்ச்சியில்

இந்த பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், 'என்னம்மா இப்படி பண்றீங்களேளேம்மா' என்று தொடங்கும் பாடலை கேட்டு இன்ப அதிர்ச்சி ஆனேன். இந்த பாடல் இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரையும் கண்டிப்பாக கவரும் வகையில் உள்ளதாக கூறியுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில்

பொன்ராம் இயக்கத்தில்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கிவரும் ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மற்றும் சூரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கும் இப்படி பெயர்

படத்திற்கும் இப்படி பெயர்

பர்ஸ்ட் பிரேம் என்ற நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என்று பெயர் வைத்துள்ளனர்.

கங்காதரன் என்ற புதியவர் இயக்கும் இந்தப் படத்தில் புதுமுகங்கள் நடிக்கின்றனர்.

இப்படி பண்ணிட்டீங்களேம்மா...

இப்படி பண்ணிட்டீங்களேம்மா...

ஒரு வார்த்தை... ஒரே வார்த்தை லட்சுமி ராமகிருஷ்ணனை ஓஹோ என்று புகழடையச்செய்துவிட்டது.

என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா....

English summary
One of the most recent refrains that's heard across Tamil Nadu is "Yennamma Ipdi Panreengalema", made popular by Actress - Director Lakshmi Ramakrishnan, in her TV Show. Music Composer D Imman, for his upcoming film with Sivakarthikeyan, will be crooning a song that starts with this popular line.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil