»   »  'ஆமா... கஸ்தூரிராஜா மகன்தான் தனுஷ்... இது கன்ஃபார்ம்டுடா கண்ணா…!!' - இயக்குநர் விசு விளக்கம்

'ஆமா... கஸ்தூரிராஜா மகன்தான் தனுஷ்... இது கன்ஃபார்ம்டுடா கண்ணா…!!' - இயக்குநர் விசு விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் தனுஷ் எங்கள் மகன் என்று ஒரு குடும்பம் சொல்லியிருக்கும் புகாருக்கு விசு பதில் சொல்லியிருக்கிறார்.

இன்று முன்னணி நடிகராக, தயாரிப்பாளராகத் திகழும், தனுஷ் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன் என்பது சினிமா வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரியும்.

Yes.. Dhanush is Kasthuriraja's son! - Veteran Director Visu

ஆனால் தனுஷ் எங்கள் மகன், அவர் எங்களுக்கு மாதா மாதம் பணம் தர வேண்டும் என்று ஒரு தம்பதி வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அந்த வழக்கு விசாரணைக்கும் தனுஷ் குடும்பம் அழைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கஸ்தூரிராஜாவின் குடும்பத்தினருடன் விசு குடும்பம் சேர்ந்திருக்கும் படம் ஒன்று நேற்று முன் தினம் இணையத்தில் வைரலானது. இதில் தனுஷ் சிறு வயது தோற்றத்தில் நின்றுகொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் இயக்குநர் விசுவும் உள்ளார்.

இதுகுறித்து விசு தனது வெப்டிவியில் விளக்கம் சொல்லியிருக்கிறார்.

அவர் கூறுகையில், "தனுஷ் கஸ்தூரிராஜா அவர்களின் மகன் தான். அந்த படத்தில் இருப்பது தனுஷ்தான். எனக்கு அவர்கள் குடும்பத்தை வெகு காலமாகத் தெரியும். தனுஷ் பிறக்கும்போது கஸ்தூரிராஜா என்னிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். நாங்கள் நெருங்கிய நண்பர்கள்,'' என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்.

கஸ்தூரிராஜா வயிற்றில் பாலை வார்த்துட்டீங்க விசு சார்!

English summary
Veteran film maker and actor Visu has confirmed that Dhanush is the son of director Kasthuriraja.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil