»   »  2.0-ல் நான் வில்லன்தான்... ஆனால் வேற லெவல் வில்லன்! - ரஜினி

2.0-ல் நான் வில்லன்தான்... ஆனால் வேற லெவல் வில்லன்! - ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

2.0 படத்தில் வில்லன் வேடத்திலும் தான் நடித்துள்ளதை முதல் தோற்ற வெளியீட்டு விழாவில் உறுதிப்படுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

எந்திரன் படத்தின் 2-ம் பாகமாக 2.0 படம் வெளியாகிறது. பொதுவாக இரண்டாம் பாகம் என்று கூறிக் கொண்டு வரும் படங்கள், முதல் பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் வரும். ஆனால் முதல் பாகத்தின் கச்சிதமான தொடர்ச்சியாக 2.ஓவை உருவாக்கியுள்ளார் ஷங்கர்.

Yes, I'm the Villain in 2.0 - Rajinikanth

முதல் பாகத்தில் டாக்டர் வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும், சிட்டி என்ற டெரர் வில்லனாகவும் தோன்றினார். குறிப்பாக சிட்டி வேடத்தில் கலக்கினார். அவரது சிட்டி கெட்டப்புகள் மிகப் பிரபலமாகின.

இரண்டாம் பாகத்திலும் ரஜினி இரு வேடங்களில் வருகிறார். அதே டாக்டர் வசீகரன் ஒரு வேடம். அடுத்தது சிட்டி அப்க்ரேடட் வர்ஷன் 2.0. இது என்ன மாதிரி வேடம்? வில்லத்தனம் கலந்ததா? என்று கேட்டதற்கு ரஜினி அளித்த பதில்...

"2.0 ல் அக்ஷய் ஏற்ற பாத்திரம் மிகவும் பவர்புல்லானது. அந்த வேடத்தை ஏன் ஷங்கர் எனக்குத் தரவில்லை என்று தெரியவில்லை.

ஆனால் வில்லன் வேடங்கள் செய்வது எனக்குப் புதிதல்ல. பிடித்தமானதும் கூட. இந்தப் படத்தில் நான் வில்லன்தான். வில்லன் என்றால் இது வேற லெவல் வில்லன்," என்றார்.

இந்தப் படத்தில் பூமியைக் காக்கும் வீரனாக வருகிறார் சிட்டி. நல்ல வில்லன் Vs கெட்ட வில்லன். இதுதான் படத்தின் மையக் கரு என தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Superstar Rajinikanth says that he plays villain role in 2.0 movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil