»   »  வெள்ளிக்கிழமை ரிலீஸ்.. எதுவுமே "ஆஹாஹா" ரகம் இல்லையாமே!

வெள்ளிக்கிழமை ரிலீஸ்.. எதுவுமே "ஆஹாஹா" ரகம் இல்லையாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாராவாரம் தமிழ்த் திரையுலகில் இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே வெளியாகி வந்த நிலை, ஜூன் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று நிலைமை மாறியது. ஆமாம் நேற்று ஒரே நேரத்தில் 5 படங்கள் வெளியாகின.

ஆதியின் நடிப்பில் யாகாவாராயினும் நாகாக்க, விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை, விமலின் காவல், கருணாஸின் லொடுக்கு பாண்டி மதுமிதாவின் மூணே மூணு வார்த்தை போன்ற 5 படங்கள் நேற்று ஒரே நாளில் வெளியாகி திரைகளை ஆக்கிரமித்தன.


நேற்று வெளியான 5 படங்களுமே வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் படங்களே,முன்னணி நடிகர்களின் நடிப்பில் நேற்று எந்தப் படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று நேற்று நாளை

இன்று நேற்று நாளை

விஷ்ணு விஷால், கருணாகரன் நடிப்பில் வெளிவந்திருக்கும் இன்று நேற்று நாளை திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கால இயந்திரம் என்ற ஒரு கான்செப்டை கையில் எடுத்து, அதை நகைச்சுவை இழையோடச் சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரவிக்குமார். நேற்று வெளியான படங்களில் வசூலில் முன்னணியில் இருக்கிறது இன்று நேற்று நாளை.


யாகாவராயினும் நாகாக்க

யாகாவராயினும் நாகாக்க

ஆதியின் நடிப்பில் வெளிவந்த யாகாவாராயினும் நாகாக்க படம் நல்ல முடிவைக் கொடுத்திருக்கிறது, நாயகன் படத்தை காலத்திற்கு தகுந்தாற்ப் போன்று மாற்றி அமைத்துள்ளனர் என்று விமர்சனங்கள் பரவலாக ரசிகர்களிடையே எழுந்துள்ளது. எனினும் சின்னச்சின்ன திருப்பங்களும், அதிரடிகளும் படத்தைக் காப்பாற்றி இருக்கின்றன. படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், கதையைச் சொன்ன விதத்தில் தாக்குப்பிடித்து வெற்றி வரிசையில் இணைந்திருக்கின்றது யாகாவாராயினும் நாகாக்க.


கம்பி நீட்டிய காவல்

கம்பி நீட்டிய காவல்

விமலின் நடிப்பில் வெளிவந்திருக்கும் காவல், வரவேற்பில் பயங்கரமாக சொதப்பி இருக்கிறது. சென்னையில் நடந்த உண்மை சம்பவம், காவலர்களை நிச்சயம் பெருமைப் படுத்தும் என்று கூறியதில் துளி அளவும் உண்மை இல்லை என்பது படத்தைப் பார்த்ததில் தெரிகிறது. விரைவில் தியேட்டரில் இருந்து தூக்கப் படலாம் என்று தியேட்டர் வட்டாரங்களில் கூறுகின்றனர்.


கவனம் ஈர்க்காத பிற படங்கள்

கவனம் ஈர்க்காத பிற படங்கள்

மதுமிதாவின் மூணே மூணு வார்த்தை, கருணாஸின் லொடுக்கு பாண்டி பெரிதாக சொல்லும் அளவிற்கு கவனம் ஈர்க்கவில்லை என்கிறார்கள்.


English summary
Yesterday 5 Movies Released In Kollywood, Aadhi’s yagavarayinum naa kaakka And Vishnu’s Indru Netru Naalai Joining The Hit Movie List.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil