»   »  37 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தவறை சரிசெய்த யேசுதாஸ்!

37 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தவறை சரிசெய்த யேசுதாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு பாடலில் தான் செய்த உச்சரிப்புப் பிழையை கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்திக் கொண்டார் பிரபல பாடகர் கேஜே யேசுதாஸ்.

Yesudass corrected his mistake after 37 years

அந்தமான் காதலி என்றொரு படம். சிவாஜி கணேசன் நடிக்க முக்தா சீனிவாசன் இயக்கியது.

எம்எஸ் விஸ்வநாதன் இசையில் கவியரசு கண்ணதாசன் எழுதிய அனைத்துப் பாடல்களுமே பெரும் வெற்றி பெற்றன. குறிப்பாக இரண்டு பாடல்கள் மிகப் பெரிய வெற்றிப் பெற்றவை. அவை அந்தமானைப் பாருங்கள் அழகு..., நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்... ஆகியவை.

இந்த இரு பாடல்களையுமே யேசுதாஸும் வாணி ஜெயராமும் பாடியிருந்தனர்.

இவற்றில் இரண்டாவது பாடலான

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்..
திருக்கோயிலே ஓடிவா.. என்ற வரிகளைப் பாடும்போது, திருக்கோயிலை 'தெருக்கோயிலே' என உச்சரித்திருப்பார் யேசுதாஸ்.

இது பலத்த விமர்சனத்துக்குள்ளானது. பத்திரிகைகள் மட்டுமின்றி சில கவிஞர்களும் கூட இதனைக் கண்டித்தனர். ஆனால் யேசுதாஸ் இதற்கு எந்த பதிலும் அளித்ததில்லை.

தொடர்ந்து பல ஆண்டுகளாக விமர்சிக்கப்பட்ட இந்த உச்சரிப்பை, தனது திரையுலகப் பயணத்தின் 50 வது ஆண்டில் திருத்திக் கொண்டார் யேசுதாஸ்.

நேற்று சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பாடினார் யேசுதாஸ்.

அப்போது திருக்கோயிலே.. வரி வந்தபோது சட்டென்று நிறுத்திய அவர், "ரொம்பப் பேர், ரொம்ப வருஷமா இந்தப் பாட்டில் என்னுடைய உச்சரிப்பை குறை கூறி வந்தனர். இப்போதும் சிலர் சொல்கிறார்கள். அந்த உச்சரிப்பு தவறுதான் என ஒப்புக் கொள்கிறேன். காரணம் அப்போது நான் தமிழுக்குப் புதிது. அப்போதுதான் கற்க ஆரம்பித்தேன். அந்தப் பாடல் பாடும்போது இசையமைப்பாளர் எம்எஸ்வியோ, பாடலாசிரியர் கண்ணதாசனோ அங்கில்லை. வேறு வேலையில் இருந்தார்கள். உதவியாளர்கள் எல்லாம் சாப்பிடப் போயிருந்தார்கள். அதனால் என் உச்சரிப்பை யாரும் கவனிக்கவில்லை. அப்படியே ரெக்கார்ட் ஆகி வந்துவிட்டது.

இப்போது, இந்த மேடையில் அந்தத் தவறை திருத்திக் கொள்கிறேன்,' என்று கூறி, திருக்கோயிலே ஓடி வா.. என சரியான உச்சரிப்புடன் பாடினார்.

Read more about: yesudas, யேசுதாஸ்
English summary
KJ Yesudas has corrected his pronunciation in a song, Ninaivale Silai Seithu... from Andaman Kadhali after 37 years.
Please Wait while comments are loading...