மலேசியாவில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் மேலும் ஒரு நடிகர் காயம்
Recommended Video

சென்னை: மலேசியாவில் நடந்த நட்சத்திர கால்பந்தாட்ட போட்டியில் விளையாடிய மேலும் ஒரு நடிகரும் காயம் அடைந்துள்ளார்.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டும் வகையில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்தினார்கள். மேலும் பிரபலங்கள் கலந்து கொண்ட கால்பந்தாட்ட போட்டி, கிரிக்கெட் போட்டியும் நடந்தது.
கால்பந்தாட்ட போட்டியின்போது நடிகர்கள் காயம் அடைந்துள்ளனர்.

காயம்
கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய முருகா புகழ் நடிகர் அசோக் குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

புகைப்படம்
காயம் ஏற்பட்ட தனது காலை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அசோக் குமார். அவரது கணுக்கால் இடத்தில் ஓவராக வீங்கியிருப்பதை பார்த்தாலே பரிதாபமாக உள்ளது.
நண்பர்கள்
என் கால் பற்றி கேட்கும் நண்பர்களே, நான் நலமாக உள்ளேன். உங்களின் அன்புக்கும், அக்கறைக்கும் மிக்க நன்றி. உங்கள் பிரார்த்தனைகளால் விரைவில் குணமடைவேன் என்று ட்வீட்டியுள்ளார் அசோக் குமார்.

காயம்
கால்பந்தாட்ட போட்டியில் கோல் போட முயன்ற நடிகர் ஆரியை ஒருவர் தடுக்க முயன்றபோது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











