»   »  2 நாட்களில் 2 புகார்கள்: தம்பதிகளுக்கு பஞ்சாயத்து செய்யப் போய் பெரும் சிக்கலில் ஊர்வசி

2 நாட்களில் 2 புகார்கள்: தம்பதிகளுக்கு பஞ்சாயத்து செய்யப் போய் பெரும் சிக்கலில் ஊர்வசி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தனது தனிப்பட்ட பிரச்சனையை டிவியில் தெரிவித்து தனது குடும்பத்தை அசிங்கப்படுத்திவிட்டதாக பெண் ஒருவர் நடிகை ஊர்வசி மீது கேரள மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

நடிகை ஊர்வசி பிரபல மலையாள டிவி சேனலில் தம்பதிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியால் ஊர்வசி பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

நிகழ்ச்சி தொடர்பாக ஊர்வசி மீது புகார்கள் எழுந்துள்ளன.

முதல் புகார்

முதல் புகார்

பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ஊர்வசி குடிபோதையில் ஆண்களை அவதூறாக பேசுவதாக கேரள மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் ஒருவர் புகார் அளித்தார். இந்நிலையில் ஊர்வசி மீது பெண் ஒருவரும் புகார் அளித்துள்ளார்.

இரண்டு புகார்கள்

இரண்டு புகார்கள்

இரண்டு நாட்களில் ஊர்வசி மீது இரண்டு பேர் கேரள மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்கள் குறித்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

கணவர்

கணவர்

ஊர்வசி மீது புகார் தெரிவித்துள்ள பெண் தனது மனுவில் கூறியிருப்பதாவது, நான் என் கணவரை பிரிந்து வாழ்கிறேன். அவர் எனக்கும், குழந்தைகளுக்கும் செலவுக்கு பணம் அளிப்பது இல்லை. இந்நிலையில் அவர் ஊர்வசியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என் மீது பல புகார்கள் தெரிவித்தார்.

ஊர்வசி

ஊர்வசி

என் கணவர் தெரிவித்ததை எல்லாம் டிவியில் காட்டியதுடன் என் அனுமதி இல்லாமல் என் புகைப்படத்தை நிகழ்ச்சியில் காண்பித்து என் குடும்பத்தை அசிங்கப்படுத்திவிட்டார் என ஊர்வசி மீது புகார் தெரிவித்துள்ளார் ஒரு பெண்.

English summary
Kerala state human rights commission has received two complaints against actress Urvashi in connection with a Television programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil