Just In
- 3 hrs ago
எனக்கு இப்பவே அந்த மாதிரி ஃபீலிங்கா இருக்கே... ஈஸ்வரன் பட நடிகை லொள்ளு !
- 3 hrs ago
ரெட் சில்லி ஆண்ட்ரியா … இது செம காரம் மச்சி!
- 3 hrs ago
அருண் விஜயின் 31வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு... டப்பிங் பணி ஆரம்பம்!
- 4 hrs ago
பார்த்ததுமே குப்புன்னு வியர்க்கும்.. கேஜிஎப்-பை தூக்கி சாப்பிடறோம்.. தளபதி 65 லேட்டஸ்ட் அப்டேட்
Don't Miss!
- News
'இது சர்தார் படேலுக்கு நேர்ந்த அவமானம்' - நரேந்திர மோடி ஸ்டேடியத்தை பிரித்து மேயும் காங்கிரஸ்
- Automobiles
மாருதி, டாடா மோட்டார்ஸை போல் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு!! சென்னையில் சோதனை ஓட்டம்...
- Sports
போற போக்கை பார்த்தா 3வது போட்டியிலயே 400 விக்கெட் சாதனையை செஞ்சுடுவாரோ.. அஸ்வின் கெத்து!
- Finance
1030 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் உயர்வு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஏ ஆர் ரஹ்மானை தந்த மணிரத்னம் இப்போது சித் ஸ்ரீராமை அறிமுக படுத்திக்கிறார்
சென்னை : வானம் கொட்டட்டும் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக அரங்கேறியது.
மனிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஜஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் தங்கையாக நடித்திருப்பது சிறப்பு.பல வருடங்களுக்கு பிறகு ராதிகா மற்றும் சரத்குமார் இணைந்து நடித்து இருக்கும் திரைப்படம் வானம் கொட்டட்டும். இப்படத்திற்கு முதல் முறையாக சித் ஸ்ரீராம் இசை அமைத்துள்ளார்.

இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் மனிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாசினி முன் சீட்டில் உட்கார்ந்து மொத நிகழ்ச்சியையும் கண்டு கழித்தனர் . ராதிகா மற்றும் சரத்குமார்,இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிகர் சாந்தனு, மடோனா செபாஸ்டின் மற்றும் படத்தில் நடித்த முன்னணி நடிகர்கள் பங்கேற்றனர்.
விழாவில் ஜஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில் இப்படம் தான் தங்கை கதாபாத்திரத்தில் எனக்கு கிடைத்த முதல் படம், இதற்கு பின் தான் நம்ம விட்டு பிள்ளை . இதில் எனக்கு பிடித்தமான பாடல் இசி கம் இசி கோ என்ற பாடல் தான் என கூறினார் ஜஸ்வர்யா ராஜேஷ்.

சித் ஸ்ரீராம் பாடல்களை வரிசையாக பாட ஒவ்வொரு பாடல் இடைவெளியில் வந்து இருந்த சிறப்பு விருந்தினர்கள் பேசினர்.மனிரத்னம் என்ற வார்த்தை விழாவில் அதிகமாக ஒலித்தது, எல்லோரும் அவரை புகழ்ந்து பேசினார்கள்.
இந்த விழாவில் ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் பேச்சு பிரமாதமாக இருந்தது. அவர்கள் பேசுகையில்
ராதிகா இப்படத்தில் நான் நடித்தை பெருமையாக கருதுகிறேன். இயக்குனர் தனாவிற்கு நன்றி. நான் ஷூட்டிங் ஸ்பாட்ல் சரத்குமார் இடம் பேசியதை விட படத்தில் என்னுடன் நடித்த விக்ரம் பிரபு,ஜஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மடோனா செபாஸ்டின் இவர்களுடன் தான் அதிகம் பேசி மகிழ்ச்சியாக இருந்ததேன் என்று கூறினார்.

மேலும் மனிரத்னம் சார் உடன் இணைவதே பெருமை நான் அவரிடம் கேட்டேன் ஏன் எனக்கு இந்த கதாபாத்திரம் என்று அவர் சிம்பிளாக இரண்டு வரியில் பதிலளித்தார்.இப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.
பொன்னியின் செல்வனில் நான் நடிக்க வேண்டியது ஜஸ்வர்யா ராய் நடித்து விட்டார் .
என்ன விட நாலு இன்ச் அழகாக இருக்கிறார் அது தான் நான் நடிக்கவில்லை. ஜஸ்வர்யா ராய் பற்றி பேசுகையில் நக்கலாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார் .

மெட்ராஸ் டாக்கீஸ் இத்தனை வருடங்களாக நினைத்து பார்க்க கூடிய மிக சில படங்களை தயாரித்துஉள்ளது,அதில் இதுவும் ஒன்று.
டிரைலர் விழாவில் ஒளிபரப்பபட்டது , வட்ட வடிவில் வழக்கமான ஆடியோ தட்டு வெளியிடபட்டது.
மிகவும் எதிர்பார்த்த மணிரத்னம் , ஒருவார்த்தை கூட பேசவில்லை. வந்தார், நின்றார் , சென்றார். அது மட்டும் தான் கொஞ்சம் வருத்தம் . இருந்தாலும் இந்த இந்திய சினிமா உலகத்திற்கு ஏ ஆர் ரஹ்மானை தந்த மணிரத்னம் இந்த முறை சித் ஸ்ரீராமை அறிமுக படுத்திக்கிறார்.காலம் தான் பல வெற்றிகளை கொடுக்க வேண்டும்.