வம்புல மாட்டி விடாதீங்க... ஒரேயொரு சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான்: YG மகேந்திரன் ஓபன்

சென்னை: ஒய்.ஜி மகேந்திரன் தயாரிக்கும் சாருகேசி படத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரசிகர்கள் முன்னிலையில் சுவாரஸ்யமான பல நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

அவரை தொடர்ந்து பேசிய ஒய்ஜி மகேந்திரன் ரஜினி குறித்தும் சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றியும் மனம் திறந்த் பேசினார்.

கடந்த சில தினங்களாக சூப்பர் ஸ்டார் டைட்டில் சர்ச்சையாகி வரும் நிலையில், ரஜினி முன்னிலையில் ஒய்ஜி மகேந்திரன் பேசியது வைரலாகி வருகிறது.

 சாருகேசி பட அறிமுக விழா

சாருகேசி பட அறிமுக விழா

ஒய்ஜி மகேந்திரன் தயாரிக்கும் சாருகேசி திரைப்படத்தின் அறிமுக விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. நாடகமாக மேடையேற்றப்பட்ட சாருகேசி தற்போது திரைப்படமாகவும் உருவாகிறது. இதனை முன்னிட்டு தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் இந்த அறிமுக விழா நடந்து முடிந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருடன் மேலும் பல திரை பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 ஒரேயொரு சூப்பர் ஸ்டார் தான்

ஒரேயொரு சூப்பர் ஸ்டார் தான்

இந்த விழாவில் பேசிய ரஜினி, தனது மனைவியை அறிமுகப்படுத்தி வைத்த ஒய்.ஜி மகேந்திரனுக்கு நன்றி சொன்னதோடு சாருகேசி நாடகம் குறித்தும் பெருமையாக பேசினார். மேலும், இளமை காலத்தில் மது, சிகரெட், சாப்பாடு என ஜாலியாக பொழுதை கழித்த நினைவுகளையும் வரிசைப்படுத்தினார். அதன் பின்னர் பேசிய ஒய் ஜி மகேந்திரன், ரஜினி குறித்த சில நெகிழ்வான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு பட்டம் கொடுக்க நினைக்கிறேன், அது ஒரேயொரு சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் தான் எனக் கூறினார்.

 ஒரே ரஜினி ஒரே சூப்பர் ஸ்டார்

ஒரே ரஜினி ஒரே சூப்பர் ஸ்டார்

ஒரேயொரு மக்கள் திலகம், ஒரேயோரு நடிகர் திலகம், ஒரேயொரு மெல்லிசை மன்னர், ஒரேயொரு கவி கண்ணதாசன் போல ஒரேயொரு ரஜினிகாந்த் தான், அவர் தான் ஒரேயொரு சூப்பர் ஸ்டார் என ஒய்ஜி மகேந்திரன் பேசினார். மேலும் அவர் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்கவர் என்றும், இந்த விழாவுக்காக அவரை போனில் தான் அழைத்தேன். நேரில் வரவேண்டாம் கண்டிப்பா நிகழ்ச்சிக்கு வந்துவிடுவேன் என இதோ வந்துவிட்டார் ரஜினி, அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றார் ஒய்ஜி மகேந்திரன். இப்படி ஒரு நல்ல மனிதத்தன்மை தான் ரஜினியை சூப்பர் ஸ்டாராக நிற்க வைத்துள்ளது. அந்த இடம் வேறு யாருக்கும் கிடையாது என ஆணித்தரமாக கூறினார்.

 வம்புல மாட்டி விடாதீங்க

வம்புல மாட்டி விடாதீங்க

தொடர்ந்து பேசிய அவர், இப்போ நிறைய வாரிசு பிரச்சினை வந்துட்டு இருக்குது எனக் கூறினார். அப்போது ரசிகர்கள் விசிலடிக்கவும், நான் வாரிசு படத்தை பற்றி பேசவில்லை, என்ன வம்புல மாட்டிவிடாதீங்க, இது வேறு வாரிசு பிரச்சினை என்றார். மேலும், நான் சொல்ல வந்தது அடுத்த தலைமுறையில் இருந்து வாரிசு வருகிறார்கள், அவர்கள் திறமையானவர்களாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்றார். வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியது வைரலானது. இதனை நேரடியாக குறிப்பிடாமல் ஒய்ஜி மகேந்திரன் பேசியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X